ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 100வது நாள் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியில், திடீரென போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
காவலர்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டோர் கற்கலை வீசத் தொடங்கியதும், அவர்களை அப்புறப்படுத்தத் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. பின்னர் இந்தப் போராட்டம் உச்சத்தை எட்டி வன்முறையை எட்டியது. தூத்துக்குடி முழுவதும் கலவரம் வெடித்தது.
கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரக் காவலர்கள் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துயர சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். போலீசாரின் இந்தச் செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தச் சம்பவத்தை தீவிரவாதம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ளார். இதில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மக்களுக்கு தங்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
,