Rahul Gandhi minimum income scheme : குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 20% ஏழை மக்களுக்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ராகுல் காந்தி அறிவிப்பு. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதைத் தொடர்ந்து இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi minimum income scheme
காங்கிரஸ் கட்சியை இந்தியர்கள் தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால், ஆண்டிற்கு ரூபாய் 72,000-ஐ ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்படும் என்று அறிக்கை ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இந்த செயல் திட்டத்தினால் இந்தியாவில் 5 கோடி குடும்பங்களில் வாழும் சுமார் 25 கோடி மக்கள் பயனடைவர் என்றும், உலகில் வேறெந்த பகுதியிலும் இப்படி ஒரு மகத்தான திட்டம் அறிவிக்கப்படவில்லை என்று ராகுல் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே நிறைய பொருளாதார நிபுணர்களுடன் பேசிய பின்னரே இம்முடிவிற்கு வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை பற்றியும் கலந்தாலோசனை செய்து விட்டோம். வறுமையை ஒழிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட கடைசி ஆயுதம் இது என்று கூறினார் ராகுல் காந்தி.
மேலும் படிக்க : சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி! முடிவுக்கு வந்த இழுபறி!
ராகுல் அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரில் #MinimumIncomeGuarantee டிரெண்ட் ஆகி வருகிறது. பலரும் இது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்,
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘இது ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும் புரட்சிகரமான திட்டம்’ என வர்ணித்தார்.