வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது வயநாடு நிலச்சரிவு நிகழ்வு பற்றி பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு ஒரு விரிவான மறுவாழ்வு தொகுப்பை வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
மேலும், வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மத்திய அரசு, கேரள அரசு மற்றும் பல்வேறு துறைகளின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ராகுல் காந்தி பாராட்டினார்.
முன்னாள் வயநாடு எம்.பி., நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு சமீபத்தில் சென்ற அனுபவத்தை தனது சகோதரியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி வத்ராவுடன் பகிர்ந்து கொண்டார். “இந்த சோகத்தின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, வலி மற்றும் துன்பத்தை நான் என் கண்களால் பார்த்தேன். ஏறக்குறைய 2 கிலோமீட்டர் மலை இடிந்து விழுந்துள்ளது, கிட்டத்தட்ட கற்கள் ஆறு, ஒரு மண் ஆறு கீழே வந்துவிட்டது” என்று ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். ஆனால், இறுதியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“