Advertisment

அமேதியில் ராகுல், வாரணாசியில் பிரியங்கா: மாநில காங்கிரஸ் தலைவர் தகவல்

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Aug 18, 2023 20:50 IST
New Update
Actress Sherlyn Chopra expressed her desire to marry Rahul Gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போடுடியிடுவார்” என்றார்.

Advertisment

ராகுல் தற்போது வயநாடு தொகுதி எம்.பியாக உள்ளார். இவர், 2019 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.

எனினும் அவர் அமேதி தொகுதியில் தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும், வயநாட்டில் வெற்றிப் பெற்றார்.

அதேபோல், 2019 மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி, வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட போகிறார் என்ற வதந்திகள் தொடர்ந்து வந்தன.

பின்னாள்களில் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Uttar Pradesh #Rahul Gandhi #Congress #Priyanka Gandhi #Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment