Advertisment

லோக்சபா தேர்தல்: ராகுல் யாத்திரை 2.0 தொடக்கம்; இந்தி மாநிலங்களில் கவனம் செலுத்த திட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரிலிருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ராவை இன்று தொடங்குகிறார். 67 நாட்கள் 6,713 கி.மீ தூரம், 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகளை இந்த யாத்திரையில் கடந்து செல்கிறார். இது ஒரு 'சித்தாந்த யாத்திரை' என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
RAGA Yatra 2.0.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து இன்று (ஜன.14) பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்குகிறார். மக்களவைத் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன், நடந்த முடிந்த 

சட்டமன்றத் தேர்தலில் 3 இந்தி மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவிய 1 மாதத்திற்குப் பிறகு 

ராகுல் காந்தி தனது 2-வது யாத்திரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் இன்று தொடங்குகிறார். 

Advertisment

மணிப்பூர் இம்பாலுக்கு அருகிலுள்ள தௌபாலில் இருந்து யாத்திரையை தொடங்குகிறார். இது தேர்தல் யாத்திரை அல்ல என்று காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், மக்களவைத் தொகுதிகள் உள்ள இடங்களில் ராகுலின் யாத்திரை 2.0 கடந்து செல்ல உள்ளது. மேலும் யாத்திரையில் இந்தி பகுதிகளில் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிடுகிறது.

சுமார் 100 மக்களவைத் தொகுதிகளில் யாத்ரா கடக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தற்காலிகப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 58 இடங்கள் உள்ளன.  உ.பி.யில் மட்டும், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி, ரேபரேலி, அமேதி, அலகாபாத், புல்பூர் மற்றும் லக்னோ ஆகிய 28 மக்களவைத் தொகுதிகள் வழியாக யாத்திரை செல்லும்.

இந்த யாத்திரையானது இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமான சமாஜ்வாதி கட்சியின் (SP) கோட்டைகளான கன்னோஜ், அசம்கர், எட்டாவா, மைன்புரி மற்றும் ஃபிரோசாபாத் ஆகியவைகளை தவிர்கிறது. இருப்பினும் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை உள்ள ராம்பூர், சம்பல் மற்றும் படவுன் போன்ற பகுதிகளில் கடந்து செல்கிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சி பா.ஜ.க.வுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்று கருதுகிறது. 

இந்த யாத்திரை அதிகபட்சமாக உ.பி.யில் 11 நாட்கள் நடக்கிறது. அரசியல் ரீதியாக மிக முக்கிய மாநிலமான உ.பி-ல் 80 இடங்களைக் கொண்ட மாநிலத்தில் கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் முத்திரை பதிக்கத் தவறிவிட்டது.

உ.பி-ல்  28 ஊர்கள் வழியாக ராகுல் நடந்து செல்கிறார். சந்தௌலி, வாரணாசி, மச்லிஷாஹர், ஜான்பூர், புல்பூர், அலகாபாத், பதோஹி, பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, மோகன்லால்கஞ்ச், ஹர்தோய், சீதாபூர், தௌராஹ்ரா, ஷாஜஹான்பூர், அயோன்லா, மொராத் பரேலி, ராம்பூர், சம்பல், அம்ரோஹா, அலிகார், படான், புலந்த்ஷாஹர், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா. 

பல மாநிலங்களில், காங்கிரஸுக்கு இன்னும் ஆதரவு இருக்கும் இடங்களில் யாத்திரை கவனம் செலுத்தும். மகாராஷ்டிராவில், கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு ஆகிய இரு கட்சிகளின் கோட்டைகளையும் கடந்து செல்லும்.

இந்த யாத்திரையின் மிகப் பெரிய சோதனையானது 5 மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பார்கள் என  காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன - இது மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட்,  உ.பி மற்றும் மகாராஷ்டிரா வழியாக மார்ச் மூன்றாவது வாரத்தில் மும்பையில் முடிவடையும்.

"நாங்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களிலும், ஜூம் கால்களிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்... இப்போது நாங்கள் களத்தில் ஒன்றாகப் பார்ப்போமா என்பதுதான் சோதனை. ஐந்து மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் யாத்திரையில் இணைந்தால், ஒற்றுமையும் தோழமையும் தெளிவாகத் தெரிந்தால், எங்களால் தாக்கத்தை உருவாக்க முடியும்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி யாத்திரை தனது மாநிலம் வழியாக செல்லும் போது ஒரு கட்டத்தில் அதில் இணைவார்களா என்பது கட்சிக்கு தெளிவாக தெரியவில்லை.

இந்த யாத்திரை வங்காளத்தில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளான கூச் பெஹார், அலிபுர்துவார்ஸ், ஜல்பைகுரி, டார்ஜிலிங், மால்டா உத்தர், மால்டா தக்ஷின், ஜாங்கிபூர், முர்ஷிதாபாத், பஹரம்பூர் மற்றும் பிர்பூம் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளைக் கடக்கும். தொகுதிப் பங்கீடு தொடர்பாக டிஎம்சியுடன் காங்கிரஸ் மோதலில் ஈடுபட்டுள்ளது, பிந்தையது காங்கிரஸுக்கு மால்டா தக்ஷின் மற்றும் பஹரம்பூர் ஆகிய இரண்டு சிட்டிங் இடங்களை மட்டும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டது.

உ.பி-க்குப் பிறகு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் யாத்திரை செல்லும். இது மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார், திண்டோரி, துலே, நாசிக், பிவாண்டி, கல்யாண், தானே, மும்பை-வட மத்திய, மும்பை வடகிழக்கு, மும்பை தெற்கு-மத்திய - என 10 இடங்களைக் கடக்கும்.

உ.பி-க்குப் பிறகு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் வழியாக யாத்திரை செல்லும். இது மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார், திண்டோரி, துலே, நாசிக், பிவாண்டி, கல்யாண், தானே, மும்பை-வட சென்ட்ரல், மும்பை வடகிழக்கு, மும்பை தெற்கு-சென்ட்ரல்- என 10 இடங்களைக் கடக்கும். 

bharat-nyay-yatra.webp

அதோடு பட்டியல் சாதியினர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) அதிக இருக்கும்  இடங்களிலும் யாத்திரை கவனம் செலுத்தப்படும். ஒட்டுமொத்தமாக, பல மாநிலங்களில் 13 எஸ்.சி மற்றும் 17 எஸ்.டி இடங்கள் உட்பட - 30 இட ஒதுக்கீடு இடங்கள் வழியாகவும் ராகுல் யாத்திரை  செல்கிறார் .

மணிப்பூர் மற்றும் நாகாலாந்தைத் தொடர்ந்து யாத்திரை அசாமில் நுழையும். ஜோர்ஹட், கலியாபோர், லக்கிம்பூர், தேஜ்பூர், நவ்காங், கௌஹாத்தி, பார்பெட்டா மற்றும் துப்ரி போன்ற இடங்களை கடந்து செல்லும். இதில் 4 இடங்கள் பா.ஜ.க வசம் உள்ளன. 



யாத்ராவின் தெளிவான கவனம் ஹார்ட்லேண்ட் ஆகும், அங்கு ஒரு காலத்தில் பெரிய கட்சி வலுவாக இருந்தது. பீகாரில், கிஷன்கஞ்ச், அராரியா, பூர்னியா, கதிஹார், ஔரங்காபாத், கரகாட், சசரம் மற்றும் பக்சர் ஆகிய காங்கிரஸின் சிட்டிங் இடங்கள் வழியாக இது செல்லும்.

ஜார்க்கண்டில், கிரிதிஹ், தன்பாத், ஹசாரிபாக், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், தும்கா, குந்தி, சிங்பூம் மற்றும் பலாமு போன்ற இடங்களை அது தொடும் - இவற்றில் ஏழு இப்போது பாஜகவிடம் உள்ளன. காங்கிரஸ் சிங்பூம் வென்றது, கிரிதிஹ் AJSU வென்றது.

சத்தீஸ்கரில்  ராய்கர், சுர்குஜா, ஜாஞ்ச்கிர்-சம்பா மற்றும் கோர்பா ஆகிய 4 இடங்களுக்கு மட்டுமே யாத்திரை செல்லும்.

மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் மற்றும் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் கோட்டைகளான குணா மற்றும் குவாலியரை யாத்திரை கடந்து செல்லும்.

யாத்திரை குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு "சித்தாந்த யாத்திரை" என்றும் தேர்தல் யாத்திரை அல்ல என்றும் கூறினார்.  “இது ஒரு அரசியல் கட்சியின் யாத்திரை. இது ஒரு சித்தாந்த யாத்திரை, தேர்தல் யாத்திரை அல்ல” என்றார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அரசியல் எதேச்சதிகாரம் ஆகியவற்றை நம்பும் ஒரு சித்தாந்தத்தை எதிர்கொள்வதுதான் நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும் என்றார்.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/rahul-gandhi-bharat-jodo-nyay-yatra-congress-lok-sabha-elections-hindi-sc-st-9108294/

15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 337 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 100 மக்களவைத் தொகுதிகளை 67 நாட்களில் 6,713 கிமீ தூரம் பயணிக்கும் இந்த யாத்திரை இன்று மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் உள்ள தனியார் மைதானத்தில் இருந்து தொடங்குகிறது. முதலில் இம்பாலில் இருந்து தான் யாத்திரை தொடங்க இருந்தது. யாத்திரையைத் தொடங்குவதற்கு முன், 1891-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி ஆங்கிலோ-மணிப்பூர் போரில் உயிரிழந்த தியாகிகளின் நினைவாக கட்டப்பட்ட கோங்ஜோம் போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment