Advertisment

அசாமில் ராகுல் யாத்திரை: ஆதரவாளர்களுடன் போலீஸ் மோதல்; காங். தலைவர் மீண்டும் காயம்; வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட முதல்வர்

கூட்டத்தைத் தூண்டியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அசாம் காவல்துறைக்கு அறிவுறுத்தியதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

author-image
WebDesk
New Update
rahul yatra

பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் ஒரு பகுதியினருடன் அசாம் காவல்துறை மோதலில் ஈடுபட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் பங்கேற்ற மக்களுக்கும், குவஹாத்திக்குள் யாத்திரை நுழைய முயன்ற போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சியின் அஸ்ஸாம் தலைவர் பூபென் போரா மற்றும் கட்சித் தலைவர் ஜாகிர் உசேன் சிக்தர் ஆகியோர் காயமடைந்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rahul Yatra in Assam: State Cong chief injured again as police clash with supporters; Himanta asks Assam police to register case against Rahul Gandhi

கூட்டம் நெரிசலை ஏற்படுத்தும் என்பதால் குவஹாத்தி நகருக்குள் யாத்திரை அனுமதிக்கப்படாது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னதாக தெரிவித்திருந்தார். இதனால், கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க அரசு, காங்கிரஸ் யாத்திரையை முடக்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டியது.

மேகாலயாவிலிருந்து குவஹாத்தி நோக்கிப் புறப்பட்ட யாத்திரையில் பங்கேற்றவர்கள் செவ்வாய்க் கிழமை காலை குவஹாத்தி நகருக்குள் செல்லும் பாதை கானாபரா பகுதியில் போலீஸ் தடுப்புகளால் தடுக்கப்பட்டதைக் கண்டனர். தடுப்புகளை உடைக்க முயன்ற யாத்திரையில் பங்கேற்ற தொண்டர்களை அதிகாரிகள் பின்னுக்குத் தள்ள வேண்டியிருந்தது என்று அசாம் காவல்துறை கூறியது.

“போலீசார் லத்தியால் தாக்கினார்கள், என் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. மேலும், பலர் காயமடைந்துள்ளனர்” என்று யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்த காங்கிரஸ் தொழிலாளி நவீன் குமார் பாஸ்வான் கூறினார்.

எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ஹிமந்தா பிஸ்வா சர்மா, “கூட்டத்தைத் தூண்டியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு அசாம் காவல்துறைக்கு அறிவுறுத்தியதாகவும், மேலும் கட்டுப்பாடற்ற நடத்தை மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதற்காக காங்கிரஸ் தொண்டர்களைத் தாக்கியதாகவும்” கூறினார்

“இவை அசாமிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல. நாம் அமைதியான மாநிலம். இத்தகைய நக்சலைட் தந்திரங்கள் நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானவை. நான் அறிவுறுத்தியுள்ளேன்.

அஸ்ஸாமி டி.ஜி.பி @DGPAssamPolice, கூட்டத்தைத் தூண்டியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி @RahulGandhi மீது வழக்குப் பதிவு செய்து, உங்கள் பக்கத்தில் நீங்கள் பதிவிட்ட காட்சிகளை ஆதாரமாகப் பயன்படுத்துங்கள். கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதால் இப்போது குவஹாத்தியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று என்று ஹிமந்தா பிஸ்வா பதிவிட்டுள்ளார்.

இந்த கைகலப்பில் போரா மற்றும் சிக்தர் ஆகியோர் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அசாமின் சோனிட்பூர் மாவட்டத்தில் யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்த வாகனங்கள் மீது பா.ஜ.க கொடிகளை ஏந்திய ஒரு கூட்டம் தாக்கியதில் போரா காயமடைந்தார்.

அசாம் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் மீரா போர்தாகூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், யாத்திரையில் பங்கேற்றவர்கள் காலை 7.30 மணிக்கு குவஹாத்தி நகருக்குள் நுழையும் நோக்கத்துடன் கானாபராவில் கூடியிருந்தனர். ஆனால், அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

“காவல்துறையினர் அனைத்து சாலைகளையும் அடைத்துள்ளனர்... அரசு நிர்வாகம் அனைத்து போக்குவரத்தையும் தடுத்தது - சில ஆம்புலன்ஸ்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் - அதனால், அவர்கள் ராகுல் ஜியின் யாத்திரையை (மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்காக) குற்றம் சாட்டுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

“எனவே, ராகுல் ஜி மற்றும் அவரது குழுவினர், சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு, இங்கிருந்து செல்ல முடிவு செய்துள்ளனர்” என்று போர்தாகூர் மேலும் கூறினார்.

செவ்வாய் கிழமை மதியம் 12.30 மணியளவில், போலீஸார் தடுத்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் இருந்து குவஹாத்திக்குள் நுழைய முடியாமல், நெடுஞ்சாலை வழியாக யாத்திரை தொடர்ந்தது.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மேகாலயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவதில் இருந்து தான் தடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

இந்த உத்தரவு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சரால் அஸ்ஸாம் முதல்வர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“நான் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து உங்களிடம் உரையாற்ற விரும்பினேன், நீங்கள் சொல்வதைக் கேட்க விரும்பினேன். ஆனால், என்ன நடந்தது என்றால், இந்திய உள்துறை அமைச்சர் அசாம் முதலமைச்சரை அழைத்து, பல்கலைக்கழகத் தலைமையை அழைத்து, மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியது” என மாணவர்கள் மற்றும் அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் அவரது யாத்திரை பேருந்தில் இருந்தவர்ளிடம் ராகுல் காந்தி கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அசாமின் எல்லையில் உள்ள மேகாலயாவின் ரி போய் மாவட்டத்தில் உள்ள மேகாலயாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யு.எஸ்.டி.எம்), செவ்வாய்க்கிழமை காலை மாணவர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் ராகுல் தனித்தனியாக உரையாட திட்டமிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment