இந்தியா கேட் அருகே உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள வழக்கறிஞர்கள் முதல் பிரகதி மைதானம் அருகே இருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகள், சுவரொட்டிகள், இசையுடன் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்ற காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சி செங்கோட்டையில் முடிவடைவதற்கு முன், இந்தியா கேட், ஆசிரமம் மற்றும் டெல்லி வருமானவரித்துறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் வழியாக 23 கிலோமீட்டர்கள் நீண்ட தொலைவு செல்லும் போது டெல்லி நகரமே நின்று பார்க்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியா கேட் அருகே உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள வழக்கறிஞர்கள் முதல் பிரகதி மைதானம் அருகே உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் இசையுடன் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்ற காட்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஸ்கைவாக் சாலையில் மக்கள் கூட்டம் நடைபாதைகளில் இடம் கிடைக்காமல் கூட்டம் அலைமோதியது. பதர்பூரிலிருந்து செங்கோட்டை வரையில் சாலையோரங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்காகக் காத்திருந்தபோது பலரும் “ராகுல் ஜி கஹான் ஹை?” (ராகுல் ஜி எங்கே” என்று கேட்டனர்.
சமீபத்தில் கல்லூரி பட்டம் பெற்ற பிங்கி (22), அவரது தாயார் உமா தேவி (47) நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே உள்ள ஈஸ்வர் நகரில் வசிப்பவர்களும், வழிநெடுகிலும் பார்க்க கூடியிருந்தனர். பிங்கி கூறுகையில், “என்னைப் போன்ற இளைஞர்கள் ராகுல் காந்தியை பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் நம்மை நன்றாகப் புரிந்துகொள்வார் என்ற எண்ணம் இருக்கிறது. அனேகமாக, நாம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

டெல்லியில் ஆசிரம சௌக்கிற்கு அருகில் வசிக்கும் எலிசபெத்தும் அவரைப் பார்க்கக் காத்திருந்தவர்களில் ஒருவர். டிஃபென்ஸ் காலனியில் உள்ள ஒரு பல் மருத்துவமனையின் பணியாளர் ஒருவர், சனிக்கிழமை அதிகாலையில், பதர்பூரிலிருந்து தனது பணியிடத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் கவனக்குறைவாக யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்துவிட்டதாகக் கூறினார். தன்னை அழைத்துச் செல்லும் வாகனங்கள் எதுவும் கிடைக்காததால், சுக்தேவ் விஹார் வரை நடந்ததாகக் கூறினார். ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இவ்வளவு தூரம் நடந்து சென்றதைப் பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.
டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லாத பலர் கலந்து கொண்டனர். அவர்களில் டெல்லியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அப்துல்லா மற்றும் ஜாவேத் என்ற 32 வயது இளைஞர்கள் யாத்திரை வழியாக சைக்கிள் ஓட்டிச் சென்றனர். ஓக்லாவில் வசிக்கும் அப்துல்லா, அவர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல. ஆனால், யாத்திரை எதைக் குறிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதில் சேர முடிவு செய்ததாகக் கூறினார். “ராகுல் காந்தி நிமிர்ந்து நிற்கிறார், அவர் எல்லா மதத்தினரையும் தன்னைச் சுற்றி ஒருங்கிணைக்கிறார், நான் அவரை மற்றவர்களுடன் பார்க்கவில்லை. ஜனநாயக தரவரிசையில், நாம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறோம். இந்தியாவில் இது தொடருமானால், நான் மிகவும் பயப்படுகிறேன்…” என்று அப்துல்லா கூறினார்.
துபாயில் பணிபுரிந்து டெல்லி திரும்பிய 50 வயதான நரேந்திரன், தனக்கு கட்சியுடன் தொடர்பு இல்லை என்றும், ஆஷ்ரம் பகுதியில் இருந்து தனது மனைவியுடன் ‘ஆத்ம திருப்தி’க்காக யாத்திரையில் நடந்ததாகவும் கூறினார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே எந்த வேறுபாடும் இல்லாமல் இந்த யாத்திரையின் நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று அவர் கூறினார்.
சமீபத்திதில் நடந்த டெல்லி மாநகராட்சித் தேர்தல்கள் மற்றும் 2020-ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டிலும் மோசமாகப் போராடிய ஒரு கட்சிக்கு, இது போன்ற ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி உணர்த்துவது என்ன?
நரேந்திரன் கூறுகையில், “இது உலகை மாற்றப் போவதில்லை. ஆனால், இந்த யாத்திரை எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக உள்ளது. மக்கள் அதனுடன் நின்றுள்ளனர்.
இதேபோல், எலிசபெத் கூறுகையில், “யாத்திரையைப் பார்ப்பதற்கோ அல்லது அதில் கலந்துகொள்வதற்கோ மக்கள் அதிக அளவில் கூடுவதால் அவர்கள் வாக்குகளைப் பெறுவார்கள் என்று அர்த்தமில்லை. இந்த நகரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை அவர்கள் இழந்துவிட்டதாகத் தெரிகிறது.” என்று கூறினார்.
ஆஷரம் அருகே தையல் தொழிலாளியாக இருக்கும் நானக் சந்த் (55), தனது கடையில் இருந்து யாத்திரையை பார்த்தார். “யாத்திரைக்காக மக்கள் கூடிவிட்டனர், எனவே யாத்திரை நிச்சயமாக ஏதோவொன்றைக் குறிக்கிறது. ஆனால், கட்சியில் இருந்து வலுவான தலைவர்கள் யாரும் இங்கு இல்லாததால், நகரில் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது மாறவில்லை” என்று அவர் கூறினார்.
ஆசிரமம் அருகே நடந்த யாத்திரையைப் பார்த்த தொழிலதிபர் நேஹா பன்சால் (36), கூறுகையில், “இது போன்ற நடைபயணத்தை வேறு யாராலும் செய்ய முடியாதது போல் தெரிகிறது. உள்ளூர் மக்களுடன் அவர் (ராகுல்) தொடர்பு கொள்ளும் விதம்… அவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்” என்று அவர் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்த சீலம்பூரில் வசிக்கும், பரேலியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான கமில் ஹுசைன் (30), இந்த யாத்திரையில் எழுப்பப்படும் பிரச்சினைகள் முக்கியமானவை என்று கூறினார். “நான் ஒரு நாள் வேலைக்கு சுமார் 500 முதல் 600 ரூபாய் விட்டுவிட்டு இங்கு வந்தேன். ஆனால், இந்த யாத்திரை முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எங்களைப் போன்ற மக்கள் விலைவாசி உயர்வு செலவு அதிகரிப்பு பற்றி பேசுகிறார்கள். இந்த யாத்திரையும் அதே போன்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறது” என்று கமில் ஹுசைன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“