Advertisment

சாவர்க்கர் குறித்து ராகுல் விமர்சனம்.. மகா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும்.. சஞ்சய் ராவத்

வீரசாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து மகா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்தத் தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhis remarks on Savarkar will cause cracks in MVA alliance

சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மூத்தத் தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மகாராஷ்டிராவின் இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கரைப் பற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் கருத்துக்கள் மாநிலத்தில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக சிவசேனா மீண்டும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெள்ளிக்கிழமை (நவ.18) செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத் கூறுகையில், “வீர் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி கூறியது, மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும்.
இது நிச்சயமாக கசப்பை ஏற்படுத்தும். எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படும், இது நல்ல அறிகுறி அல்ல”என்றார். அதாவது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் முறிவு ஏற்படுமா? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நேரடியாக பதில் அளித்தார்.

Advertisment

முன்னதாக, செவ்வாய்கிழமை வாஷிமில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது அவர், “ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், (பிர்சா முண்டா) தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்.
காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் சிலையாக கருதுகிறோம். ஆனால், பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதி, ஓய்வூதியம் வாங்கிய சாவர்கார்ஜிக்கு சிலை வைக்கின்றனர்” என்றார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மகாராஷ்டிராவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, எனவே இந்த நேரத்தில், அவர் சாவர்க்கர் பிரச்சினையை எழுப்பி சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று ராவத் கூறினார்.
தொடர்ந்து சஞ்சய் ராவத், “நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, மகாராஷ்டிராவில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாட்டில் நிலவி வரும் வெறுப்புணர்வுக்கு முடிவு கட்டவும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பவும் அவரது யாத்திரை அமைந்துள்ளது.
அவர் இந்தப் பிரச்சினைகளை சரியாக எழுப்பியிருக்கிறார். அவர் ஒரு நல்ல வேலையைச் செய்து தேசத்தின் மனசாட்சியைக் கிளறிக் கொண்டிருக்கும்போது, சாவர்க்கரின் பிரச்சினையை அவர் எழுப்ப வேண்டிய அவசியம் எங்கே இருந்தது?
அவர் அதைப் புறக்கணித்து, அவர் செய்யும் நல்ல வேலையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும், ”என்றார்.

மேலும், “வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிவசேனா சார்பாக சஞ்சய் ராவத் கேட்டுக்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Congress Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment