காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இடையே விரிசல் இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
இது தொடர்பாக பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் ராகுல் காந்தி கைகளை பிடிக்க பிரியங்கா காந்தி மறுக்கிறார். மற்றொன்று ராகுல் காந்திக்கு பிரியங்கா காந்தி ராக்கி கட்டவில்லை.
இதற்கிடையில், அதிகார அரசியல் மையத்தில் இருந்து பிரியங்கா காந்தியை விலக்கிவைக்கதான் சோனியா காந்தி ராகுல் காந்தியை ஆதரிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
பிரியங்கா, ராகுல் இடையே தொடக்கத்தில் இருந்தே சில வேறுபாடுகள் உள்ளன. ராகுல் உடன் ஒப்பிடுகையில் பிரியங்கா காந்தி தோற்றத்தில் இந்திரா காந்தி போல் இருப்பதால் அதிகளவு கூட்டத்தை இயல்பாக ஈர்த்துவிடுகிறார்.
இது தொடர்பான விவாதங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நீண்ட காலமாக இருக்கின்றன. இதற்கிடையில் பாஜகவின் வீடியோக்களை பார்த்து பிரியங்கா காந்தி சிரித்துள்ளார்.
எனினும் கடந்த காலத்தை போல் தற்போது ராகுல் காந்தி இல்லை என்பதை கட்சி உயர் மட்ட தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
கடந்த கால பப்பு போன்ற வசை சொற்கள் அவரை பலவீனப்படுத்தாடு என நம்புகின்றனர். மேலும், ராகுலின் எழுச்சி சிறுபான்மை வாக்குகளை காங்கிரஸுக்குப் பின்னால் ஒருங்கிணைக்கக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன.
சில பிராந்தியக் கட்சிகள் ஏற்கனவே இந்தியக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், “சிறுபான்மையினர் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் இதுபோன்ற துருவமுனைப்பு, பல மாநிலங்களில் பாஜகவுக்கு சவாலாக இருக்கலாம்" என கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் இடையே உள்ள உறவு, சாதாரண சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவு அல்ல. ராகுலை விட பிரியங்கா புத்திசாலி.
சோனியா காந்தியும் ராகுலுடன் முழுமையாக இணைந்துள்ளார். இதனால்தான் இந்தியா கூட்டணிக் கூட்டங்களில் பிரியங்கா பங்கேற்கவில்லை. அந்த சகோதரியை தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை காண வீடியோவை பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
அதே நாளில், பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “இந்து சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குக் கட்டும் புனித நூல் ராகுலின் மணிக்கட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ராகுலின் மணிக்கட்டில் நூல் இருப்பதைக் காட்டும் காணொளி மூலம் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு, தி கிரவுன் நெட்ஃபிக்ஸ் தொடரின் போஸ்டரை பாஜக வெளியிட்டது. அதில், நடுவில் சோனியா ராணியாக, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருடன், "பிரியங்கா வத்ரா ராகுலை செக்மேட் செய்து கிரீடத்தைப் பறிக்க முடியுமா? இது கிரீடத்துக்கான போர். இறுதி செக்மேட் நகர்வை யார் வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்க காத்திருங்கள்” எனத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர், “மோடிக்கு எதிரான ராகுலின் வெறுப்பு வேலி அமைப்பபாளர்கள், மத சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்கிறார்கள்.
மணிப்பூருக்கான அவரது விஜயம் வடகிழக்கு மாநிலங்களில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுள்ளது. தெற்கிலும் பாரத் ஜோடோ யாத்திரை சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தாங்கள் ராகுலை தீவிர அச்சுறுத்தலாக பார்க்கவில்லை” எனவும் தெரிவித்தார். மற்றொரு மூத்த தலைவர், புதிய தாக்குதல் மிகவும் தனிப்பட்டதாக இருக்கலாம் என்று கூறினார்,
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார். தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது குழுவிற்கு மோடி அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார், விலைவாசி உயர்வு தொடர்பாக அரசாங்கத்தை குறிவைத்தார், அத்துடன் அது எதேச்சதிகார போக்குகள் மற்றும் கூட்டாட்சியை தாக்குவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ராகுல் மற்றும் பிரியங்கா பற்றிய பாஜக சமூக ஊடக பிரச்சாரம் வெறுமனே ஒரு திசை திருப்பும் தந்திரம்” என்றார்.
தொடர்ந்து, “அதானி மெகா ஊழல், வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் புதிய வன்முறை பற்றி பேசுவதற்குப் பதிலாக... அவர்கள் இவற்றைச் செய்கிறார்கள். நாங்கள் திசைதிருப்பப்பட்டு மற்ற விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்குவோம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அது முக்கியமில்லை. உங்கள் உண்மையான நிறம் என்ன என்பதை இது காட்டுகிறது. உடன்பிறப்புகளைப் பற்றிப் பேச விரும்புவதும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நமது நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான படத்தை நீங்கள் காட்டிய விதத்தில் மிகைப்படுத்த விரும்புவது, பெண்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அற்ப மரியாதையைக் காட்டுகிறது” என்றார்.
மேலும், “உண்மையான பிரச்சினைகளில் இருந்து காங்கிரஸ் விலகாது என்றும் ஷிரினேட் கூறினார். தொடர்ந்து, “காங்கிரஸின் சமூக ஊடகங்கள், ஊடகங்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எங்கள் தலைமை ஆகியவை சாமானியர்களின் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன, இது அவர்களை பதற்றமடையச் செய்கிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.