தேர்தல் வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா...ராகுல் காந்தி தொகுதி வயநாட்டில் 3 காந்திகள் போட்டி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வயநாடு தொகுதி

வயநாடு தொகுதி

காங்கிரஸ் தலைவர் போட்டியிடும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெயரில் 2 பேர்களும், காந்தி என முடியும் பெயரில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் ராகுலுடன் சேர்த்து வயநாட்டில் போட்டியிடும் காந்திகள் 4 பேர். இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் இந்த 3 காந்திகளும் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

வயநாடு தொகுதி:

Advertisment

வயலும், வனமும் நிறைந்த வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ராகுல் செல்லும் இடமெல்லாம் அவருக்கு உற்சாகம் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் ராகுல் போட்ட்டியிடுவார் என யாரும் கணிக்காத நேரத்தில் தனது அறிவிப்பை வெளியிட்டார் ராகுல்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுலுடன் சேர்த்து 3 காந்திகள் போட்டியிடுகின்ற்ன. இவர்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.ராகுல் காந்தி கே.இ. 33 வயதாகும் இவர் சுயேட்சை வேட்பாளராக வயநாட்டில் இளம் இறங்கியுள்ளார். கோட்டயம் பகுதியை சேர்ந்த இவர் நாட்டுப்புற இசைக் குறித்த ஆராய்ச்சி மாணவர். இவரின் தம்பி பெயர் ராஜீவ் காந்தி கே.இ. காங்கிரஸ் தலைவர் வேட்புமனு தாக்கல் அதே நாளில் தான் இவரும் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை அளித்தார்.

இவரின் குடும்பமும் தீவிர காங்கிரஸ் விசுவாசிகள். காந்தி குடும்பத்தின் கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே இவரின் தந்தை பிள்ளைகளுக்கு ராகுல் மற்றும் ராஜீவ் என பெயர் சூட்டியுள்ளார்.

Advertisment
Advertisements

அடுத்தாக போட்டியிடுபவர், கோயம்புத்தூரை சேர்ந்த ராகுல் காந்தி கே. 30 வ்யதாகும் இவர், அகில இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதுக் குறித்து ராகுல் காந்தி கே கூறியிருப்பதாவது, “"என் தந்தை கிருஷ்ணன் பி.இ. உள்ளூர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். பின்னர் அவர் அ.தி.மு.க. கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் காலத்தில் நான் பிறந்ததால் எனக்கு ராகுல் காந்தி என்று பெயர் சூட்டினார். என் சகோதரியின் பெயர் இந்திரா பிரியதர்ஷினி. அன்று என் தந்தை இந்த பெயரை எனக்கு வைக்கும் போது கண்டிப்பாக இப்படியொரு தருணம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார். நான் தேர்தலில் 3 ஆவது முறையாக நிற்கிறேன். இதற்கு முன்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மூன்றாவது, கே. எம் சிவபிரசாத் காந்தி. 40 வயதாகும் இவர் திரூச்சூர் பள்ளியில் ஆசியராக பணிப்புரிஉந்து வருகிறார்.

Rahul Gandhi Wayanad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: