டெல்லி ரகசியம்: வெளிநாட்டுக்கு சென்றுள்ளாரா ராகுல் காந்தி?

அவரது வெளிநாட்டுப் பயணத்தை கட்சி தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவும் இல்லை.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் அஜய் மக்கன் ஆகியோருடன் நவம்பர் 10 ஆம் தேதி ராகுல் காந்தியின் துக்ளக் லேன் இல்லத்தில் சந்திப்பு நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்காததால், அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவரது வெளிநாட்டுப் பயணத்தை கட்சி தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை. இருப்பினும், ராகுல் காந்தி சந்திப்பில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், ” இது வசதியான இடம் என்பதால், கூட்டம் நடத்தப்பட்டதாகவும், AICC தலைமையகம் அல்லது GRG போர் அறை இத்தகைய கூட்டத்திற்கு ஏற்ற இடம் அல்ல என தெரிவித்தார்.

கேரளாவை விடாத பாஜக

பாஜக கட்சியின் இலக்குகளிலிருந்து கேரளா பிரிவு மாறி செயல்பட்டாலும், கட்சியின் தலைமை இன்னும் கேரள பிரிவின் அதீத கவனம் செலுத்திவருகிறது.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கட்சித் தொண்டர்களுக்கு மன உறுதியை அளிக்கும் பணிக்காக மூன்று நாட்களுக்கு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் மாநிலத்தில் திறன் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மதிப்பாய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று மாநிலத் தலைவர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rahul was not present at the meeting as he is believed to be out of the country

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com