Advertisment

ஹாலிவுட் நடிகர் போட்ட ஒத்த ட்வீட்.. குதுகலமான காங்கிரஸ் தலைவர்கள்..!

நான் உண்மையை சொன்னேன். ஒரு தலைவர் ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொள்கிறார்.ஒருவேளை ஒற்றுமை கூட அங்கு சட்டவிரோதமாக இருக்கலாம் .

author-image
WebDesk
New Update
Rahuls yatra When John Cusack shakes up things

முன்னதாக இவர் சிஏஏ எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றுக்கும் ஆதரவு அளித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக் (John Cusack) ஆதரவு கிடைத்துள்ளது.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேரளா வழியாக நடந்து காஷ்மீர் செல்கிறார்” என ட்வீட் செய்திருந்தார்.

Advertisment

அவரின் ட்வீக்கு ஒருவர் எத்தனை கிலோ மீட்டர் என வினவியிருந்தார். இதற்கு மற்றொருவர் 3750 கிலோ மீட்டர் பதிலளித்தார்.
இவ்வாறு ஜான் குசாக்கின் ட்வீட்டிற்கு கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதில்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு சார்பில், “நாட்டின் ஒற்றுமையை வேண்டி ராகுல் காந்தி கன்னியாகுமரி-காஷ்மீர் நடைபயணம் மேற்கொள்கிறார்” எனப் பதிலளிக்கப்பட்டது.

மேலும் இந்த ட்வீட்க்கு பதிலளித்த தேசிய மாணவர் அமைப்பின் தேசிய செயலர் ரோஷன் லால் பிட்டு, “ராகுல் காந்தி, லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொள்கிறார் எனத் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு வாழ் இந்திய காங்கிரஸ் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் விஜய் தொட்டா1ஹில், “பாசிஸ்டுகளுக்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் சுராஜ் தாகூர், “வணக்கம். ஜான். ராகுல்தான் அடுத்த பிரதமர்” எனப் பதிலளித்திருந்தார்.
56 வயது அமெரிக்க நடிகரான ஜான் குசாக் நடிகர், அரசியல்வாதி, திரைகதை ஆசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். இவரது தந்தையும் நடிகர் ஆவார்.

முன்னதாக இவர் சிஏஏ எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றுக்கும் ஆதரவு அளித்திருந்தார். இந்த நிலையில் ஜான் குசாக்கின் ட்வீட்க்கு ஒருவர் , “உங்களது ஒரு வார்த்தையும் ஒட்டுமொத்த வலதுசாரிகளும் தூண்டப்பட்டுவிட்டனர்”எனக் கூறியிருந்தார்.

இதை ரீ-ட்வீட் செய்த ஜான், “நான் உண்மையை சொன்னேன். ஒரு தலைவர் ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொள்கிறார்.ஒருவேளை ஒற்றுமை கூட அங்கு சட்டவிரோதமாக இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரிஷிபாகிரி, “அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜான். இவர் (ராகுல் காந்தி) 2019இல் அமேதி தொகுதியை விட்டு ஓடி கேரளத்தின் வயநாடு போய் சேர்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment