scorecardresearch

ராகுல் காந்தி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு.. இந்து விரோதம் என பாஜக குற்றச்சாட்டு

ராகுல் காந்தி யாத்திரையில் பாதிரியாரின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து விரோதம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

ராகுல் காந்தி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு.. இந்து விரோதம் என பாஜக குற்றச்சாட்டு
ராகுல் காந்தியுடன் கலந்துரையாடும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி-காஷ்மீர் ஒற்றுமை யாத்திரையின் போது சனிக்கிழமை (செப்.10) சர்ச்சைக்குரிய பாதிரியாரை சந்தித்துப் பேசினார்.
இது காங்கிரஸின் இந்து விரோத போக்கை காட்டுகிறது எனப் பாஜக விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், “வெறுப்பு தொழிற்சாலை ராகுல் பற்றி ட்வீட்களை பகிர்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஆடியோவுக்கும் ராகுலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இணையத்தில் பரவி வரும் அந்த ஆடியோவில் ஜீசஸ்தான் உண்மையான கடவுள் சக்தி அல்ல என பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியுள்ளார்.
இந்த உரையாடல் தொடர்பான ஆடியோவை பாஜக தலைவர்கள் பலர் பகிர்ந்துள்ளனர். இது குறித்து பேசிய பாஜக தலைவர் சம்பித் பத்ரா, “இந்துக்கள் மீது ராகுல் காந்தி வெறுப்புணர்வு கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது.

இன்னும் சில நாள்களில் நவராத்திரி தொடங்கும் நிலையில், இது சக்தி தேவியை அவமதிக்கும் வகையில் உள்ள எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட காணொலியில் ராகுல் கடவுள் பற்றி வினவுகிறார்.
அதற்கு பதிலளிக்கும் பொன்னையா, “கடவுள் மனிதனாக வெளிப்படுகிறார்.
இயேசுதான் கடவுள். அவர் சக்தி போல் அல்ல” என்கிறார். சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியாரான ஜார்ஜ் பொன்னையா கடந்தாண்டு ஜூலை தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் போட்ட பிச்சை எனப் பேசியிருந்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் ஆட்சேபனைக்குரிய வகையில் பேசினார்.

தொடர்ந்து பாரத மாதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாஜக எம்.ஆர். காந்தி செருப்பு அணியாமல் நடக்கிறார். நாங்கள் பூமா தேவியிடம் உள்ள அழுக்கு எங்களிடம் ஒட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஷூ அணிகிறோம் என்றார்.

இதைப் பற்றிய பேசிய சம்பித் பத்ரா, “காங்கிரஸ் இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ராமர் குறித்தும் கேள்வியெழுப்பினார்கள்” என்றார்.
மேலும், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்கள் பக்கம் ராகுல் காந்தி வருவார். தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் இந்து விரோத முகம் வெளிப்பட்டுவிடும் என்றார்.

இந்த வெறுப்பை ராகுல் பெருமையுடன் அணிந்து கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ஒரு மதத்தை திருப்திபடுத்த இன்னொரு மதத்தை மறுதலிக்கலாமா? எனவும் கேள்வியெழுப்பினார்.

பாரதிய ஜனதாவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி இதுவரை எந்த நேரடி பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கெரா கூறுகையில், “இது போன்ற பாரம்பரியம் இந்தியாவுக்கு புதிதல்ல. இதனை பாஜக புரிந்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாளவியா, “போலி நம்பிக்கையில் ஈடுபடும் மேலாதிக்கவாதிகள் எவ்வாறு சமுதாயத்தில் ஒற்றுமையை கொண்டுவர முடியும்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ராம் ரமேஷ் மற்றொரு ட்வீட்டில், “நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் கொலைகளுக்கு காரணமானவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

என்ன ஒரு மோசமான நகைச்சுவை. பாரத் ஜோடோ யாத்திரையின் மேன்மையினை சீர்குலைக்கும் இதுபோன்ற மோசமான செயல்கள் படுதோல்வியடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul yatra priest remarks to him kick up row bjp says anti hindu