மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூ ஜல்பைகுரியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே சரக்கு ரயிலுடன் சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் இரண்டு பின்புற பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர். திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தொடர்ந்து, வடக்கு எல்லை ரயில்வே, நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா மற்றும் அலுபாரி சாலை வழித்தடங்களில் 19 ரயில்களை ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில் சந்திப்பு - திப்ருகார் சிறப்பு ரயில்
நியூ டின்சுகியா - தாம்பரம் எக்ஸ்பிரஸ்
கவுகாத்தி - பெங்களூரு எக்ஸ்பிரஸ்
நியூ ஜாம்பைகுரி - உதய்பூர் நகர வாராந்திர விரைவு
திப்ருகர் - புது டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ்
அகர்தலா - ராணி கமலாபதி சிறப்பு விரைவு
சீல்டா - நியூ அலிபுர்துவார் படடிக் எக்ஸ்பிரஸ்
ஹவுரா - நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
குவஹாத்தி - ஹவுரா சராய்காட் எக்ஸ்பிரஸ்
காமாக்யா - ஆனந்த் விஹார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ்
நியூ ஜாம்பைகுரி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
காமாக்யா - கயா எக்ஸ்பிரஸ்
குவஹாத்தி - ஓகா எக்ஸ்பிரஸ்
பாமன்ஹாட் - சீல்டா உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“