/tamil-ie/media/media_files/uploads/2020/03/b154-300x199.jpg)
கொரோனா வைரஸ் (COVID-19) பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக இந்திய ரயில்வே ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட அறைகளாக மாற்றியுள்ளது. கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டன நிறுத்தப்பட்டன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்).
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b155-300x201.jpg)
முழு ரயில்களும் நோயாளிகளுக்கு ஹோல்டிங் சென்டர்களாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்காகவும் மாற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த ரயில் பெட்டிகளுக்கு நீண்ட காலத்திற்கு மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
வெளியேறும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் - மாநில எல்லைகளை மூட உத்தரவு (ஸ்பெஷல் ஃபோட்டோஸ்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b156-300x200.jpg)
தற்போதுள்ள ரயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன, அங்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b157-300x196.jpg)
நோயாளிகள், செவிலியர்கள் மற்றும் பாரா மருத்துவ ஊழியர்களுக்காக வெவ்வேறு ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கேபின்களின் கதவு எளிதில் அதற்கேற்ப பெயரிடப்பட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b158-300x199.jpg)
"நாங்கள் என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள சுகாதார நிபுணர்களிடமும் பேசுகிறோம், மேலும் நன்மை தீமைகளை எடைபோடுகிறோம். யாரையாவது தனிமைப்படுத்தலில் அல்லது தனிமையில் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறோம்… நாங்கள் அரசாங்கத்திற்கு எல்லா வழிகளிலும் உதவ விரும்புகிறோம், அதை நோக்கி செயல்படுகிறோம், என்று ”ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b159-300x203.jpg)
ரயில் பேட்டிகள் வெவ்வேறு மண்டலங்களில் உள்ள ரயில்களில் இருந்து பிரித்து கொண்டு வரப்பட்டு, ஒழுங்காக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, நோயாளிகளை தனிமைப்படுத்த சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b160-300x200.jpg)
அதே ரயில்களில் மொபைல் சமையலறைகளும் அமைக்கப்பட்டுள்ளது (எக்ஸ்பிரஸ் புகைப்படம் தாஷி டோபிகால்)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/b161-300x200.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil