Advertisment

ரயில் கட்டணங்களும் உயருகிறது... ரயில்வே வாரிய சேர்மன் கொடுத்த புது தகவல்!

2014ம் ஆண்டு 14.2% பயணிகள் ரயில் கட்டணங்களிலும், 6.6% சரக்கு கட்டணங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில் கட்டணங்களும் உயருகிறது... ரயில்வே வாரிய சேர்மன் கொடுத்த புது தகவல்!

Avishek G Dastidar

Advertisment

Railway freight passenger fare hike : ரயில்வே டிக்கெட் கட்டணங்கள் உயர்வு. மத்திய அரசு பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சிக்கு வந்த போது டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அதன் பின்பு தற்போது கட்டணங்களை உயர்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டு நிறைவடைவதற்குள் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தி அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

நேற்று இது குறித்து ரயில்வே வாரிய சேர்மேன் வி.கே.யாதவிடம் கேட்ட போது “இது குறித்து யோசனை செய்து வருகிறோம்” என்று விளக்கம் அளித்தார். பயணிகளுக்கான கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்களையும் அதிகரிக்க இருப்பதாக கூறிய அவர், ஏற்கனவே சரக்குக போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு அதிகரிக்கும் எண்ணம் இல்லை.

ஆனால் கட்டணங்களில் மாற்றங்கள் உருவாகும் என்று அவர் மேற்கோள் காட்டினார். எப்போது விலை உயர்த்தப்படும் என்பது குறித்து திட்டவட்டமாக அவர் அறிவிக்கவில்லை. இருந்த போதும் என்னால் தெளிவாக இப்போது தான் என்று கூற இயலாது ஆனால் நிச்சயம் கட்டணங்களில் உயர்வு இருக்கும் என்பதை அவர் தெளிவாக்கினார்.

இது தொடர்பான முழுமையான செய்தியை படிக்க

சூரிய கிரகணம் எனும் வானியல் அதிசயம்

கடந்த வியாழக்கிழமை ரயில்வே வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ஆர்.டி. பாஜ்பாய் பேசும் போது, தற்போதைக்கு கட்டணங்கள் உயர்த்துவது தொடர்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை என்று கூறினார். விலையில் மாற்றங்கள் ஏற்படுமே என்று தான் கூறியுள்ளோம். ஒரு வேளை கட்டணங்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் உண்டு என அவர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்துதல் தொடர்பாக கோரிக்கைகள் வாரியம் மூலமாக மத்திய ரயில்வே துறை அமைச்சர்களுக்கு அனுப்படும். கடந்த முறை சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அதனை அவர் செயல்படுத்தவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய டைனமிக் ஃபேர் சிஸ்டம் 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ப்ரீமியம் ட்ரெய்ன்களில் பயணக்கட்டணம் 50% வரை அதிகரிக்கப்பட்டது. பின்னர் அதன் விலையில் பலமுறை மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன.

தற்போது பியூஷ் கோயலிடம் கிலோ மீட்டருக்கான கட்டணங்களை உயர்த்துதல், லோயர் கிளாஸ் கட்டணங்களை உயர்த்துதல், சப்-அர்பன் ட்ரெய்ன்களுக்கான பயண கட்டணங்களை உயர்த்துதல் மற்றும் தனித்தனி வகுப்பில் பயணிப்பவர்களுக்கான கட்டணங்களை உயர்த்துதல் ஆகியவை தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10% வரையில் கட்டணங்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

2017ம் ஆண்டு ரயில்வே கட்டணங்கள் உயர்வு குறித்து நரேந்திர மோடி கூறியிருந்தார். அதில் ரயில்வே சேவைகளின் தரங்களை உயர்த்திய பிறகு கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு 14.2% பயணிகள் ரயில் கட்டணங்களிலும், 6.6% சரக்கு கட்டணங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் ஆட்சியின் இறுதி நாளில் இதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய பாஜக மற்றும் சிவசேனா கட்சியினரின் போராட்டத்திற்கு பிறகு சப்-அர்பன் ரயில் பயண கட்டணங்களின் விலை குறைக்கப்பட்டது.

பவன் குமார் பன்சால் இருக்கும் போது தான் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஒன்றாக ரயில் கட்டணங்கள் இருக்கிறாது. 2012ம் ஆண்டு பட்ஜெட்டின் போது ரயில்வே கட்டணங்களை உயர்த்தி அறிவித்தார் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி. பின்பு அவர் தன்னுடைய பதவியை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment