”ஆன்மீக குருவை பார்த்த பிறகுதான் மார்க் ஃபேஸ்புக்கை உருவாக்கினார்”: அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் உள்ள ஆன்மீக குரு ஒருவரை பார்த்த பிறகுதான் மார்க் சூக்கர்பெர்க் முகநூலை உருவாக்கினார் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆன்மீக குரு ஒருவரை பார்த்த பிறகுதான் மார்க் சூக்கர்பெர்க் முகநூலை உருவாக்கினார் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது, சமூக வலைத்தளங்களில் நகைப்பை உருவாக்கியுள்ளது.

பலகாலமாக இந்தியாவை ஆன்மீகம் எப்படி பிணைத்துள்ளது என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், இந்தியாவில் ஆன்மீக குரு ஒருவரை சந்தித்த பிறகுதான் சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது என தெரிவித்தார்.

“மார்க் சூக்கர்பெர்க் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் நீம் கரோலி பாபா எனும் ஆன்மீக குருவை சந்தித்த பிறகு, இந்த உலகத்தை வேறு கோணத்தில் பார்க்கும் ஞானத்தை மார்க் பெற்றார். அதன் பின்பு ஆன்மீகத்தின் சக்தி உள்ளது. அதன்பிறகுதான் முகநூல் என்ற பெரிய இணையத்தளத்தை உருவாக்கினார்”, என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

மேலும், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இந்தியாவில் ஆன்மீக குருக்களை சந்தித்த பிறகே ஆப்பிள் நிறுவனத்தை துவங்கியதாக அவர் தெரிவித்தார்.

×Close
×Close