ரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி

இந்தியா முழுவதும் ரயில் பயணங்களின் நேரத்தில் உணவின் விலையை அறிய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று 2 செயலிகளை வெளியிட்டார்

பிரதமர் மோடியின் 4 ஆட்சி காலம் சமீபத்தில் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நேற்று ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் இரண்டு செல்போன் செயலிகளை வெளியிட்டார்.

மெனு ஆன் ரயில்ஸ் செயலி 

மெனு ஆன் ரயில்ஸ் என்ற செயலி மூலம் ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்களையும் பொதுமக்கள் கண்டறியலாம்.(Menu) உணவு தொகுப்பின்கீழ், காலை உணவு, மதியம் உணவு, அசைவ உணவு, ஜெயின் உணவு, இனிப்பு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு போன்ற 96 வகையான உணவு பொருட்கள் இடம்பெற்றுள்ளது. ரயில்களில் உணவு பொருட்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் உணவு பொருட்கள் மற்றும் விலை பற்றி ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலி உதவும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் மதத் செயலி 

அதேபோல் பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் ரயில் மதத் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.
அதேபோல் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பயணிகளுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிக்கான தொலைபேசி எண்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

×Close
×Close