2024-25 நிதியாண்டில் தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு கவாச் நிறுவுவதற்கு ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க:
நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்கள் குறித்து தி.மு.க எம்.பி.,க்கள் கனிமொழி கருணாநிதி மற்றும் ராணி ஸ்ரீகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: கவாச் பணிகளுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.1,216.77 கோடி. 2024-25 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு ரூ.1,112.57 கோடியாகும்.
கவாச் என்பது ஒரு உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு. "கவாச் லோகோ பைலட்டுக்கு குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரயிலை இயக்க உதவுகிறது" என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆந்திரப் பிரதேசத்தில் ரயில்வே திட்டங்களைப் பற்றி விரிவாகக் கூறினார். “ஆந்திர பிரதேசம் மிக முக்கியமான மாநிலம்…. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் ஒதுக்கீடாகும்,'' என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“