விமானத்தில் பயணிகளின் கட்டுப்பாடுகளை மீறும் நடத்தைக்கு அவர்களுக்கு பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனத்தின் யோசனையால் ஈர்க்கப்பட்ட பியூஷ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம் இதே நடவடிக்கையை இந்திய ரயில்வே ரயில்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒரு விமானத்தில் பயணிகள் கட்டுக்கடங்காத நடத்தைக்கு தடை விதிக்கும் விமான நிறுவனங்களின் யோசனையால் ஈர்க்கப்பட்ட பியூஷ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம் இதே நடவடிக்கையை இந்திய ரயில்வே ரயில்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சக அதிகாரிகளின் கருத்துப்படி, சக பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற பயணிகளை தடை செய்ய தேசியப் போக்குவரத்து முயல்கிறது.
விமானப் பயணத்தின்போது விமானப் பயணிகள் கட்டுப்பாடுகளை மீறும் விதத்தில் நடந்துகொள்வதையும், அதன் மூலம் விமானப் பயணிகளின் சக உயிர்களைப் பணயம் வைத்து வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேவும் இதுபோன்ற பயணிகளுக்குத் சில மாதங்களுக்கு தடை விதிக்க யோசித்து வருவதாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள பயணிகளும் இந்திய ரயில்வேயின் பயணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
மேலும், தேசிய போக்குவரத்து, விமான நிறுவனங்களிலிருந்து தடைசெய்யப்பட்ட பயணிகளின் பட்டியலை எடுத்து பின்னர் இந்திய ரயில்வே டிக்கெட் முறைக்கு அளிக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதன் மூலம், தடைசெய்யப்பட்ட பயணிகள் சில மாதங்களுக்கு இந்திய ரயில்வேயில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. இதுபோன்ற பயணிகளுக்கு ஆறு மாத காலத்திற்கு தடை விதிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஒரு பத்திரிகையாளரை கேலி செய்ததைத் தொடர்ந்து, இண்டிகோ விமான நிறுவனர்ம் ஆறு மாத காலத்திற்கு பயணம் செய்ய தடைவிதித்தது. இந்திய ரயில்வேயும் விமான நிறுவனங்களைப் போல யோசனையையும் செயல்படுத்த உள்ளதாக என்று ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்டேண்ட் அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை மும்பையில் இருந்து லக்னோவுக்கு விமானத்தில் போகும்போது கேலி செய்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.