சென்னை – மைசூரு இடையே அதிவேக ரயில் கோரிடார்: 9 ரயில் நிலையங்கள் தேர்வு

சென்னை முதல் மைசூரு வரை பெங்களூரு வழியாக அமையவுள்ள அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது

By: December 27, 2020, 8:06:02 AM

Railway Tamil News: சென்னை முதல் மைசூரு வரை பெங்களூரு வழியாக அமையவுள்ள அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னை, பூந்தமல்லி, ஆந்திராவிலுள்ள சித்தூர், கர்நாடகாவில் உள்ள பங்கர்பேட், பெங்களூரு, மண்டியா மற்றும் மைசூர் ஆகிய 9 ரயில் நிலையங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பூந்தமல்லி ரயில் நிலையம் டிப்போவாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

435 கி /மீ கொண்ட இந்த அதிவேக ரயில் பாதை திட்டம் சென்னை – மைசூரு – பெங்களூரு ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமையும். மற்றும் பயண நேரம் குறையும் வகையில் இருக்கும். நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை எழும் என்பதால், ரயில் நிலையங்களை இணைப்பதற்காக பேருந்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில் ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் அளவெடுப்பது முடிந்தவுடன், பாதை அமைப்பதற்கான டென்டர் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. 320 முதல் 350 கி /மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும், இந்த ரயிலின் பெட்டிகள் மெட்ரோ ரயில் பெட்டிகளை போன்ற அமைப்பு உடையதாக இருக்கும்.

7,897 கி/மீ தொலைவில் 13 ரயில்வே கோரிடர்களை அமைப்பதற்காக RITES – AECOM JV- எனற குழுமம் இந்திய ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை முதல் மைசூரு வரை அமையவுள்ள அதிவேக ரயில் திட்டம் 2051- க்குள் முடிக்க வேண்டும் என காலக் கெடு வழங்கப்பட்டு உள்ளதால், அதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nine stations identified for chennai bengaluru mysuru high speed corridor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X