தெலுங்கானாவில் ரயிலில் உள்ள கழிவறையில் வைத்தப்படி ஊழியர் ஒருவர் டீ போட்ட சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து,ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில், ரயில்வே ஊழியர் ஒருவர், ரயில் இருக்கும் கழிப்பறையில் வைத்து டீ போட்டுக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தனர். மேலும், இந்த வீடியோ கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே உணவுகளில் ஆரோக்கிய தன்மை மற்றும் சுத்தம் குறித்து ஏற்கனவே பல்வேறு வாதங்கள் இருந்து வரும் நிலையில், இதுப் போன்ற வீடியோ வெளியாகியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இரயில்வே துறை மீது பல்வேறு கண்டனங்களை தெரிவித்தனர்.
பின்பு, இந்த வீடியோ மீது நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த டீ வியாபாரி ரயில்வே ஒப்பந்த ஊழியர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், அவரின் ஒப்பந்ததாருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வேதுறை மூத்த அதிகாரி உமாசங்கர் ,
Advertisment
Advertisements
“ வீடியோவில் இடம்பெற்றுள்ள சிவாபிரசாத் என்ற வியாபாரி தான் இந்த செயலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே ரயில் நிலையத்தில் கேண்டீன் ஒப்பந்தம் யாருக்கு விடப்பட்டது என்பதை விசாரித்து, அந்த ஒப்பந்தகாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். வீடியோவில் காணப்பட்ட மற்ற இரண்டு ஊழியர்கள் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.