வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் ஏ.சி நாற்காலி கார்கள் (Chair Car) மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகள் (Executive class) மற்றும் அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் கொண்ட ரயில்களின் கட்டணங்கள் இருக்கைகள் நிரம்பும் அளவைப் பொறுத்து 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று ரயில்வே வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் போட்டி போக்குவரத்து முறைகளைப் பொறுத்தது.
இதையும் படியுங்கள்: கால்வான் மோதல்: சீன நிறுவனத்துக்கு ரூ 500 கோடி ஒப்பந்தம் வழங்கிய பி.எஸ்.என்.எல்
இருக்கை வசதிகளைப் பயன்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில், ஏ.சி இருக்கைகள் கொண்ட ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்த ரயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அதிகாரங்களை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
“இந்தத் திட்டம், அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உட்பட, ஏ.சி இருக்கை வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏ.சி சேர் கார் மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்குப் பொருந்தும்,” என்று ரயில்வே வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“தள்ளுபடியின் அளவு அடிப்படைக் கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கும். முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கூடுதல் கட்டணம், ஜி.எஸ்.டி போன்ற பொருந்தக் கூடிய பிற கட்டணங்கள், தனித்தனியாக விதிக்கப்படும். இருக்கை நிரம்பும் அடிப்படையில் ஏதேனும் ஒரு வகுப்பில் அல்லது அனைத்து வகுப்புகளிலும் தள்ளுபடி வழங்கப்படலாம்,” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களில், “50 சதவீதத்திற்கும் குறைவான இருக்கைகள் நிரப்புதலைக் கொண்ட வகுப்புகளைக் கொண்ட ரயில்கள் (தள்ளுபடி வழங்கப்படும் பிரிவுகளைப் பொறுத்து தொடக்கம் முதல் இறுதி வரை அல்லது சில குறிப்பிட்ட இடைநிலை/ பிரிவுகளில்) கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தள்ளுபடியின் அளவை தீர்மானிக்கும் போது போட்டி போக்குவரத்து முறைகளின் கட்டணங்கள் அளவுகோலாக இருக்கும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பயணத்தின் முதல் மற்றும்/அல்லது கடைசிக் கட்டம் மற்றும்/அல்லது இடைநிலைப் பிரிவுகள் மற்றும்/அல்லது தொடக்கம் முதல் இறுதி வரையிலான பயணத்திற்கு, அந்த முக்கிய இடைநிலை/ பிரிவு/ இறுதி ஆகியவற்றில் இருக்கைகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி இருந்தால், தள்ளுபடி வழங்கப்படலாம்.
“தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வரும். எவ்வாறாயினும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்பக் கொடுக்கப்படாது,” என்று உத்தரவு கூறியது.
ரயில்களில் குறிப்பிட்ட வகுப்பில் ஃப்ளெக்சி கட்டணம் பொருந்தும் மற்றும் இருக்கை நிரம்புதல் குறைவாக இருக்கும் பட்சத்தில், நிரப்புதலை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக இந்தத் திட்டத்தை முதலில் திரும்பப் பெறலாம்.
விடுமுறை அல்லது பண்டிகை சிறப்பு ரயில்களில் இந்த திட்டம் பொருந்தாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil