/indian-express-tamil/media/media_files/Uoh1zaOvQT6CdAWMG22Q.jpg)
கேரளாவின் பல்வேறு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு பயணத்தை தவிர்க்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று ( (ஜுன் 26, புதன்கிழமை) கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும், இடுக்கி மற்றும் தென் மாவட்டங்களைத் தவிர எர்ணாகுளம் முதல் வயநாடு வரையிலான 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேல் காற்று வீசியதில் தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது.
இந்நிலையில் கேரளா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இனி வரும் நாட்களில் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர் மூணாறு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. அதி கனமழையால் ஜுன் 28 வரை மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர்
பிரதீப் ஜான் அறிவுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.