காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திற்கு தலித் சீக்கிய சமூகத்தை சேர்ந்த ஒருவரை, முதலமைச்சராக நியமித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றது. ஆனால், தற்போதைய காங்கிரஸ் மேலிட தலைவர்களின் முடிவு, மகாராஷ்டிராவில் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, ரஜனி படேல் பரிந்துரைக்க மத்திய தலைமை முடிவு செய்துள்ளது.
இவர் முன்னதாக மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தலா ஒரு முறை பணியாற்றியுள்ளார். மேலும், பரிந்துரைக்கப்பட்ட எம்எல்சி பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளன. அவை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. முகுல் வாஸ்னிக் உட்பட பல பெயர்களை மாநிலக் கட்சித் தலைவர்கள் பரிசீலித்து வந்த நிலையில், படேலை காங்கிரஸ் ஹை கமாண்ட் தேர்வு செய்தது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜல் சக்தி மாநில அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு, கடந்த புதன்கிழமை டெல்லியில் தேசிய மைதானத்தில் உள்ள நமாமி கங்கே அலுவலகத்திற்குச் சென்று கங்கை நதியைச் சுத்தம் செய்வதற்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
ஜல் சக்தி அமைச்சகத்தின் திடீர் மிட்டிங்
ஜல் சக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட பணிக்குழுவின் 8ஆவது கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் அமைச்சரிடம், அயோத்தி டெவலப்மென்ட் ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து, கோயில் நகரமான அயோத்தியில் பழைய கட்டிடங்களை மீட்டெடுப்பதன் மூலமும், சுவரோவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளைச் சித்தரிப்பது மூலமும் அதன் தரத்தை மேம்படுத்தும் திட்டம் குறித்துக் கூறியதாகத் தெரிகிறது.
ஆபிஸ், ஆபிஸ்
துவாரகாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அலுவலக பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், தேசிய அதிவேக ரயில் நிறுவனம், டெல்லியிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மையத்திற்கு நெருக்கமாக வரவுள்ளது. இங்கிருக்கும் இரண்டு அறைகளில் அமைச்சகத்தின் பணிகளை செய்வதன் மூலம், ஒருங்கிணைப்பும் பொதுப் பணியும் வேகமாகச் செய்யமுடியும்.
மேலும், அமைச்சகம், இந்த அறைகளை என்ஹெச்எஸ்ஆர்சிஎல் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்காக ஒதுக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் அமைச்சகத்திற்கு வருகை தரும் போது, வேலை செய்வதற்கான தளமாக இருந்திடும்.
இல்லையெனில், அதிகாரிகள் மீட்டிங் நடுவில் செலவிடும் பகுதிகளாகவும் இது அமையலாம். எதிர்காலத்தில், இங்கு என்ஹெச்எஸ்ஆர்சிஎல் முழுமையைக ஷிப்ட் ஆகி வந்தால், செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர்.