Advertisment

ராஜஸ்தானில் இந்துவா என கண்டறிய டி.என்.ஏ சோதனை; அமைச்சரின் கருத்துக்கு எதிராக ரத்த மாதிரிகளுடன் போராட்டம்

பன்ஸ்வாரா எம்.பி ராஜ்குமார் ரோட், ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவரின் டி.என்.ஏ சோதனையின் பரிந்துரையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

author-image
WebDesk
New Update
Rajasthan Minister

ராஜ்குமார் ரோட் மற்றும் அவரது பாரத ஆதிவாசி கட்சியின் ஆதரவாளர்கள் அவர்களது இரத்த மாதிரிகளை கைகளில் பிடித்துக் கொண்டு போராட்டத்தைக் காட்ட திலாவரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பன்ஸ்வாரா எம்.பி ராஜ்குமார் ரோட், ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவரின் டி.என்.ஏ சோதனையின் பரிந்துரையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: In Rajasthan, minister’s ‘DNA test to check if Hindu’ remark met with a protest — featuring blood samples

பழங்குடியின தலைவரும், பன்ஸ்வாரா தொகுதி எம்.பி-யுமான ராஜ்குமார் ரோட், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவரின் டி.என்.ஏ சோதனை பரிந்துரையை எதிர்த்து சனிக்கிழமை போராட்டம் நடத்தினார்.

ராஜ்குமார் ரோட் மற்றும் அவரது பாரத ஆதிவாசி கட்சியின் ஆதரவாளர்கள் அவர்களது இரத்த மாதிரிகளை கைகளில் பிடித்துக் கொண்டு போராட்டத்தைக் காட்ட திலாவரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர். ஆனால், அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் அமர் ஜவான் ஜோதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதன் திலாவரின் கருத்துக்கு எதிராக கடும் கோபம் எழுந்துள்ளது. “அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை, நாங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று ராஜ்குமார் ரோட் கூறினார். அமைச்சர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், எங்கள் கட்சி மாநில சட்டசபையிலும், பிரதமர் நரேந்திர மோடி முன்பும் இந்த பிரச்சினையை எழுப்பும் என்றார்.

திலாவர், அவரும் அவரது ஆதரவாளர்களும் இந்துக்கள் அல்ல என்று பழங்குடித் தலைவரின் முந்தைய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், “அவருடைய மூதாதையரிடம் அவன் இந்துவா இல்லையா என்று கேட்போம்… அவர் இந்து இல்லை என்றால், பிறகு, அவர் தந்தையின் மகனா இல்லையா என்பதை அறிய அவரது டி.என்.ஏ- பரிசோதனைக்கு உட்படுத்துவோம்.” என்று கூறியதை அடுத்து, ஜூன் 21-ம் தேதி இந்த சர்ச்சை வெடித்தது.

ராஜஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், துங்கர்பூர் கட்சி எம்.எல்.ஏ உமேஷ் மீனா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராம்கேஷ் மீனா (கங்காபூர்) மற்றும் கன்ஷ்யாம் (தோடாபிம்) ஆகியோருடன் கலந்துகொண்ட ராஜ்குமார் ரோட், அவர் இந்து வர்ண அமைப்பின் கீழ் வரவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

“நமது நாட்டின் அரசியலமைப்பு ஒவ்வொருவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது… நாங்கள் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை, ஆனால், நாங்கள் எந்த மதத்தின் கீழும் வரவில்லை என்று உண்மையில் சொல்கிறோம். யாருக்காவது ஏன் பிரச்சனை வரவேண்டும்? மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பழங்குடியினரை தவறாக வழிநடத்துவதை பா.ஜ.க தலைவர்கள் நிறுத்த வேண்டும்” என்று கூறிய ராஜ்குமார் ரோட், தங்கள்சமூகம் அவர்களுடைய டி.என்.ஏ-வை பரிசோதனை செய்யும் வகையில் அவர்களின் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை தபால் மூலம் திலாவருக்கு அனுப்புவதாகக் கூறினார்.

இந்த போராட்டத்துக்கு பதிலளித்த திலாவர் தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். “பழங்குடியினர் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் இந்துக்கள், இந்துக்கள், இந்துக்களாகவே இருப்பார்கள்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், மற்ற மாநில பாஜக தலைவர்கள், 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்தனர்.

செப்டம்பர் 2023-ல் பாரதிய பழங்குடியினக் கட்சியிலிருந்து பி.ஏ.பி உருவாக்கப்பட்டது. பாரதிய பழங்குடியினக் கட்சி (பி.ஏ.பி) போலவே, இது ஒரு ‘பில் பிரதேசம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

சமூகம் ராஜ்குமார் ரோட் மற்றும் சில பகுதிகளில் பி.ஏ.பி-யின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முந்தைய சட்டமன்றத்தில் பாரதிய பழங்குடியினக் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக, பி.ஏ.பி இப்போது 3 எம்.எல்.ஏ--க்களையும் ஒரு எம்.பி-யையும் கொண்டுள்ளது. ராஜ்குமார் ரோட் காங்கிரஸ் கிளர்ச்சியாளரும் பா.ஜ.க வேட்பாளருமான மகேந்திர ஜீத் சிங் மால்வியாவை பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் தோற்கடித்தார்.

நாடாளுமன்றத்தில் அமர்வதற்காக ராஜ்குமார் ரோட் தனது சொராசி சட்டமன்ற இடத்தை காலி செய்வதால், பி.ஏ.பி-யின் எண்ணிக்கை உயரக்கூடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment