Advertisment

பள்ளி மாணவி ஹிஜாப் அணிய பா.ஜ.க எம்.எல்.ஏ எதிர்ப்பு: முதல்வருடன் பேசுவதாக அமைச்சர் தகவல்

பாஜக எம்.எல்.ஏ ஆச்சார்யா ஜெய்ப்பூரின் கங்காபோல் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று ஹிஜாப் அணிந்திருந்த சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகியிடம் கூறியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hijab in school

ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ ஒருவர், இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்கள் கலந்திருக்கும் பள்ளியில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்துமாறு பள்ளி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராஜஸ்தான் மாநிலத்தை நேர்ந்த பாஜக எம்.எம்.ஏ ஒருவர் பள்ளிக்கு சென்று ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்கள் மத்தியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்புமாறு கூறியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கேபினட் அமைச்சர் கிரோடி லால் மீனா, முதல்வர் பஜன் லால் ஷர்மாவிடம் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஹிஷாப் அணிவதற்கு தடை விதிப்பது குறித்துப் பேசுவதாகக் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Rajasthan BJP MLA objects to hijab in school, minister says will talk to CM

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹவா மஹாலைச் சேர்ந்தவர் பால்முகுந்த் ஆச்சார்யா. பாஜகவின் எம்.எல்.ஏ-வான இவர், நேற்று (திங்கள்கிழமை) காலை, ஜெய்ப்பூரில் உள்ள கங்காபோல் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென விசிட் சென்றுள்ளார். அங்கிருந்து வெளியாகியுள்ள வெளிவந்த ஒரு வீடியோவில், அவர் பள்ளி நிர்வாகியை அழைத்து ஹிஜாப் அணிந்திருந்த சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியது பதிவாகியுள்ளது.

மற்றொரு வீடியோவில், இந்து மற்றும் முஸ்லீம் குழந்தைகள் கலந்திருக்கும் பள்ளியில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்துமாறு பள்ளி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதேபோல் மற்றொரு வீடியோவில், அவர் மேடையில் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "சரஸ்வதி மாதா கி ஜெய்" என்ற கோஷங்களை எழுப்பி மாணவர்களை வழிநடத்துகிறார். சில பெண்கள் வேண்டாம் என்று சொல்லி அதை மறுத்துள்ளனர். ஆனாலும் அவர் அவர் பள்ளி மாணவர்களிடம் ஜெய் ஸ்ரீ ராம்என்று கோஷமிடுவது பதிவாகியுள்ளது..

இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முஸ்லீம் மாணவர்கள் சுபாஷ் சவுக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  எம்.எல்.ஏ "பள்ளிகளில் சூழலைக் கெடுப்பதை" நிறுத்த வேண்டும் என்றும் அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். "அவர் காவி அங்கி அணிந்து சட்டசபைக்கு செல்கிறார்" "அப்படியானால் ஹிஜாப் மீது ஏன் இந்த பாகுபாடு? என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ-வின் வருகைக்குப் பிறகு வெளியான மற்றொரு வீடியோவில், ஆச்சார்யா, அரசுப் பள்ளிகளில் இரண்டு வெவ்வேறு ஆடைகளுக்கு ஏற்பாடு உள்ளதா என்று முதல்வர் மற்றும் மற்றவர்களிடம் கேட்டதாகவும், அவர்கள் இல்லை என்று பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு, முஸ்லிம் மற்றும் இந்து மாணவர்கள் காவல்துறையில் வெவ்வேறு புகார்களை அளித்தனர்.

இந்த புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் வடக்கு காவல் துணை ஆணையர் ராஷி டோக்ரா தெரிவித்தார். மேலும் "இரு குழுக்களும் பள்ளியில் தங்கள் மத நடைமுறைகளைப் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் குற்றம் சாட்டியுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தின், விவசாய இலாகாவை வகிக்கும் கேபினட் அமைச்சர் மீனா பேசுகையில், “முஸ்லீம் சமூகத்தில் உள்ள மதவெறி மற்றும் காங்கிரஸின் திருப்தி அரசியலால், சமூகம் முன்னேற முடியவில்லை. அவர்களுக்கு கல்வியில் குறைபாடு உள்ளது, எனவே கல்விப் பிரச்சாரம் இருக்க வேண்டும், முஸ்லிம் சமூகம் முற்போக்கான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்களின் சிந்தனை குற்றத்தை நோக்கியே அதிகமாக உள்ளது.

பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்பட வேண்டும்,'' “ஒரு பெண் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் சென்றால், பள்ளியில் ஒழுக்கம் இருக்காது, மாணவர்கள் எந்த உடையில் வேண்டுமானாலும் பள்ளிக்குச் செல்வார்கள். ஆடை விதியை பின்பற்ற வேண்டும். ஹிஜாப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது, எனவே எந்த சூழ்நிலையிலும் பள்ளிகளில் அனுமதிக்க முடியாது, “எங்கள் எம்எல்ஏ இந்த பிரச்சினையை எழுப்பியதால்இது குறித்து முதல்வரிடம் பேசுவேன்

ஹிஜாப் அணிவது தவறு. காவல்துறையில், பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இல்லாவிட்டால் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் குர்தா பைஜாமா, வேட்டி குர்தா, சூட் பூட் அணிவார்.  அரசு பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் ஹிஜாப் தடை செய்யப்பட வேண்டும் என்று கேபினட் அமைச்சர் கிரோடி லால் மீனா தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பதிலளித்த ஜெய்ப்பூரின் ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரஃபீக் கான், “ஆச்சார்யா மலிவான விளம்பரத்திற்காகவும், தான் ட்ரெண்டிங்கில் இருந்ந வேண்டும் என்பதற்காகவும் இதை செய்கிறார். அவர் ஒரு அரசியல் கட்சியின் அனைத்து சாதிகள், மதங்கள் மற்றும் அனைத்து தொகுதிகளும்." எம்எல்ஏ அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

"ராஜஸ்தான் சமூக நல்லிணக்கம் க்கு பெயர் பெற்றது, இது போன்ற விஷயங்கள் இங்கே வேலை செய்யாது, பொறுத்துக்கொள்ளப்படாது," ஆச்சார்யா காவி  நிறத்தில் மூழ்கியிருக்கிறார். மற்றும் "மாணவர்களை அப்படியே உருவாக ஒரு மத முழக்கம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 2021 டிசம்பரில் கர்நாடகாவிலும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை வெடித்தது, உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஆறு கல்லூரி மாணவர்களுக்கு தலையை மறைத்ததால் நுழைவு மறுக்கப்பட்டது.

அன்றைய பாஜக அரசும் பல்கலைக் கழகங்கள் ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த ஆறு மாணவர்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர், அது மாநில அரசின் உத்தரவை உறுதி செய்தது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஹிஜாப் அணிவதற்கு எந்த தடையும் இல்லை என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan Hijab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment