முன்னாள் துணை முதல்வர் ஊழல் விவகாரம் குறித்து தன்னிடம் இதுவரை கூறவே இல்லை என்றும், தான் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை ஜெய்ப்பூருக்கு செல்வதாகவும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.
ஆறு மாத அமைதிக்குப் பிறகு, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டை குறிவைத்து, முந்தைய வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்குகளை அப்படியே வைத்துள்ளதாக குற்றம் சாட்டி, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழுவதும் போராட்டத்தை அறிவித்ததால், ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் காங்கிரஸில் பதற்றம் ஏற்பட்டது. இந்த வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரஸின் மத்திய தலைமை, பைலட் பேசிய நேரம் பொருத்தமான நேரம் அல்ல என்று கூறியது. ஆனால், முன்னாள் துணை முதல்வர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து கெலாட்டிடம் பேசுவதாகத் தெரிவித்தது.
நீண்ட காலமாக முதல்வர் பதவி ஆசையை வளர்த்து வரும் சச்சின் பைலட்டின் புதிய குழப்பம் காங்கிரஸ் உயர் மட்ட தலைமையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் தலைமை கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த விவகாரம் வந்துள்ளது. கவுதம் அதானி எபிசோட் போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு குறித்த ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் லோக்சபா எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸில் இந்த விவகாரம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தல் மீது காங்கிரஸ் தலைமையின் கவனம் குவிந்துள்ளது. பா.ஜ.க-வுக்கு எதிரான ஐக்கிய முன்னணியை உருவாக்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைமை, ஆளும் கட்சியை விமர்சிப்பதில், கட்சி அமைப்பு ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ, அதானி சகா போன்ற அழுத்தமான விஷயங்களில் இருந்து திசைதிருப்பக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொடர்பு கொண்டபோது, இந்த விவகாரம் குறித்து சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசிய நேரம் பொருத்தமான நேரம் அல்ல என்று தான் நம்புவதாகவும், ஆனால் திங்கள்க்ழிஅமை அல்லது செவ்வாய் கிழமை ஜெய்பூருக்கு சென்று கெலாட்டை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். “வசுந்தரா ராஜே மீதான வழக்குகளில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அவரிடம் கேட்பேன்” என்று கூறினார்.
“நான் ராஜஸ்தானின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக ஆனதில் இருந்து, சச்சின் பைலட்டை 10-15 முறை சந்தித்திருப்பேன். ஆனால், அவர் இந்த விஷயத்தை என்னிடம் ஒருமுறைகூட சொல்லவில்லை” என்று ரந்தவா கூறினார். “அவர் என்னுடன் வேறு பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார். அவர் தலைவராக இருந்தபோது ஊழல் விவகாரத்தை எழுப்பியதாக என்னிடம் ஒருமுறைகூட சொல்லவில்லை… துணை முதலமைச்சராகவும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர், பொறுப்பாளரிடமும் கூறியதாகவும், ஆனால் என்னுடன் எதுவும் பேசவில்லை என்று என்னால் கூற முடியும்.
இருப்பினும், அவர் எழுப்பிய பிரச்சினை, ஊழல் பிரச்சினை, நாங்கள் அதானி பிரச்சினையை எழுப்புகிறோம். நாங்கள் நீரவ் மோடி மற்றும் பிறரைப் பற்றி பேசுகிறோம்… எனவே, விசாரணை நடத்தப்பட வேண்டும். நாளை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூர் செல்வேன்… முதலமைச்சரிடம் பேசுவேன். சச்சின் பைலட் இரண்டு கடிதங்கள் எழுதியதாக கூறியுள்ளார். அந்தக் கடிதங்களைத் தருமாறு கேட்பேன், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து முதல்வரிடம் பேசுவேன்” என்றார்.
“பைலட் ஒன்றரை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தார். அந்த நேரத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை, அதையெல்லாம் பார்ப்போம், பேசுவோம்” என்று ரந்தாவா கூறினார்.
சச்சின் பைலட் பத்திரிக்கையாளர் சந்தித்து பேசிய நேரம் பொருத்தமான நேரம் அல்ல என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ரந்தாவா கூறினார். “ராகுல் ஜியின் தகுதி நீக்கம் குறித்து கட்சி கவலைப்படுவதைப் பாருங்கள். தினந்தோறும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தொண்டர்களைத் திரட்டி வருகிறோம்… என் பார்வையில், இது பொருத்தமான நேரம் அல்ல… முதலில், இந்த பிரச்னை குறித்து என்னிடம் பேசவில்லை. ஆனால், பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசியிருக்கலாம். இருந்தாலும் நான் போய் இருவரிடமும் பேசுகிறேன்” என்று ரந்தாவா கூறினார்.
அசோக் கெலாட்டின் தலைமைக்கு கிட்டத்தட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைமையும் கடுமையான அறிக்கையை வெளியிட்டது. “ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களைக் கவர பல புதிய முயற்சிகளை எடுத்துள்ளது” என்கிறார் காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். “இது நம் நாட்டில் நிர்வாகத்தில் மாநிலத்திற்கு தலைமைப் பதவியை அளித்துள்ளது. ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்ரா, மாநிலத்தில் கட்சி அமைப்பின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டால் சாத்தியமான ஒரு சிறந்த வெற்றியாகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்த முக்கிய சாதனைகள் மற்றும் எங்கள் அமைப்பின் கூட்டு முயற்சிகளின் வலிமையின் அடிப்படையில் காங்கிரஸ் மக்களிடமிருந்து புதிய உத்தரவை எதிர்பார்க்கும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.