Advertisment

சப்-கலெக்டர் மீது தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு... ராஜஸ்தானில் பயங்கரம்: சுயேச்சை வேட்பாளர் கைது

3 பேர் கள்ள ஓட்டு போட்டதாவும், அதற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப்-கலெக்டர் அமித் சவுத்ரி துணை போனதாகவும் ராஜஸ்தான் காங்கிரஸ் கிளர்ச்சியாளரும், சுயேட்சை வேட்பாளருமான நரேஷ் மீனா குற்றம்சாட்டினார்.

author-image
WebDesk
New Update
 Rajasthan Congress rebel Naresh Meena arrested day after slapped sub divisional magistrate  Tamil News

சப்- கலெக்டரை கன்னத்தில் அறைந்த விகாரத்தில் காங்கிரஸ் கிளர்ச்சியாளரும், சுயேட்சை வேட்பாளருமான நரேஷ் மீனாவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம், தியோலி-உனைரா சட்டசபை தொகுதியில் நேற்று புதன்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதிக்குட்பட்ட சம்ரவாடா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தினர். 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோலிக்குப் பதிலாக யூனியாரா தாலுகா அதிகார வரம்பிற்குள் தங்கள் பகுதியைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

இந்த போராட்டத்தில் ராஜஸ்தான் காங்கிரஸ் கிளர்ச்சியாளரும், சுயேட்சை வேட்பாளருமான நரேஷ் மீனாவும் பங்கேற்றார். அவர் வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது சின்னம் மங்கலாக தெரியும்படி அமைத்திருப்பதாகவும், 3 பேர் கள்ள ஓட்டு போட்டதாவும், அதற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப்-கலெக்டர் அமித் சவுத்ரி துணை போனதாகவும் குற்றம்சாட்டினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rajasthan Congress rebel Naresh Meena arrested day after he ‘slapped’ SDM and his supporters clashed with police

இதையடுத்து,  சப்-கலெக்டர் அமித் சவுத்ரி போலீசாருடன் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, சப்-கலெக்டரை சுயேட்சை வேட்பாளர் நரேஷ் மீனா கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பாக வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்குப் பின்னர், மீனாவும் அவரது ஆதரவாளர்களும் அந்த இடத்தில் அப்படியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்திற்கு மத்தியில் பேசிய நரேஷ் மீனா, சப்-கலெக்டர் அமித் சவுத்ரி மூன்று போலி வாக்காளர்களை வாக்களிக்க அனுமதித்ததாகவும், அவர்கள் வாக்களித்ததைக் கண்டு பொதுமக்கள் கிளர்ந்தெழுந்தனர் என்றும், ஆனால் தான் அந்த நிலைமையைக் கையாண்டாதாகவும் கூறினார்.

நரேஷ் மீனாவும் அவரது ஆதரவாளர்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்திருந்த நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் மீனாவின் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நரேஷ் மீனாவின் ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட மற்றொரு வீடியோவில், இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த "அமைதியான போராட்டக்காரர்களை" போலீசார் தாக்கியதாக ஒருவர் கூச்சலிடுவதைக் கேட்க முடிகிறது. அப்போது, கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கைது 

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ராஜஸ்தான் போலீசார் இன்று வியாழக்கிழமை பிற்பகல் காங்கிரஸ் கிளர்ச்சியாளரும், சுயேட்சை வேட்பாளருமான நரேஷ் மீனாவை கைது செய்துள்ளனர். புதன்கிழமை இரவே நரேஷ் மீனாவைக் கைது செய்ய போலீஸார் முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அது முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இன்று அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, காலை 9.30 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சப்-க்லெட்ரை தாக்கியதாகக் கூறப்படுவதை மறுத்தார்.மேலும், “அரசு அதிகாரிக்கு ஜாதி கிடையாது. அவர் போலி வாக்காளர்களுக்கு உதவியதால் எனக்கு கோபம் வந்தது” என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டோங்க் மாவட்ட ஆட்சியர் சௌமியா ஜா,  சப் -கலெக்டர் சவுத்ரியிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமித் சவுத்ரி தற்போது எங்களுடன் இருக்கிறார், அவரது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து நரேஷ் மீனா கைது செய்யப்பட்டார். பாரதிய நயய் சஹிந்தா மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டால், அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம்." என்றும் அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்.ஏ.எஸ்) யூனியன், நரேஷ் மீனா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் ஜாட் கரம்சாரி நல சங்கமும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment