தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்படும் பணியாளர் தேர்வு போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செயவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் இதே முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறையில் தேர்வுகள் நடத்த ஆய்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்ற தேர்வுகளை சுமூகமாக நடத்துவதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் மாதிரிகளை ராஜஸ்தான் அரசு ஆய்வு செய்யும் என்று கூறியுள்ள அவர், மாடல் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற இரு மாநிலங்களுக்கும் விரைவில் தங்களது உயர்மட்டக் குழு வருகை தரும்.
அந்த உயர்மட்டக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், இதே முறையில் பணியாளர் தேர்வுகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெலாட் கூறுகையில்,
பணியாளர் தேர்வுகளை அரசு ரகசியமாக நடத்துகிறது, இருப்பினும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன, ஆனால் இதுபோன்ற சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். பணியாளர் தேர்வு முகமைகள் பரஸ்பர ஒருங்கிணைப்பைப் நல்க வேண்டும், தேர்வு செயல்பாட்டில் நம்பகத்தன்மையை உருவாக்க அனைத்து முகவர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“