Advertisment

சூடா, சுவையா, வெட்டுக்கிளி ஃப்ரை ரெடி! அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்...

அப்பறம் நாம எப்போ ஃப்ரெண்ட்ஸ் வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட போறோம்?

author-image
WebDesk
May 30, 2020 14:00 IST
New Update
Rajasthan hotels prepare hot and tasty locust briyani, locust fry, locust 65

Rajasthan hotels prepare hot and tasty locust briyani, locust fry, locust 65

Rajasthan hotels prepare hot and tasty locust briyani, locust fry, locust 65 : கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இயல்பு நிலையை புரட்டிப்போட, மற்றொரு புறமோ, ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவை வந்தடைந்த வெட்டுக்கிளிகள் நம்மை மேலும் பீதி அடைய வைக்கிறது.  ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை நாசம் செய்து வரும் வெட்டுக் கிளிகளை என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திணறிக் கொண்டிருக்கின்றோம்.

Advertisment

மேலும் படிக்க : சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்

தென்னிந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்கம் இருக்காது என்று பலரும் கூறுகிறார்கள், ஆனால் உதகை வரை வந்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர். இந்த வெட்டுக்கிளி விவகாரத்தை சரிசெய்ய ராஜஸ்தானின் தார் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் சூப்பர் ஐடியாவை கையாண்டுள்ளனர்.

மேலும் படிக்க : இந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும்? தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க!

பறந்து வரும் வெட்டுக்கிளிகளை பிடித்து கால்கள் மற்றும் ரெக்கைகளை வெட்டி நீக்கிவிட்டு, சிக்கனுக்கு பதிலாக அனைத்து சிக்கன் உணவுகளையும் இதை பயன்படுத்தி சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெட்டுக்கிளி ஃப்ரை, வெட்டுக்கிளி டீப் ஃப்ரை, வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டிக்கிளி க்ரேவி. கேட்கும் போதே, ஒரு மாதிரியான ஃபீலா இருந்தாலும், இப்போதைக்கு இந்த வெட்டுக்கிளியை உண்டு இல்லை என செய்ய இந்த ஆலோசனை கூட நன்றாக தான் இருக்கிறது. அப்பறம் நாம எப்போ ஃப்ரெண்ட்ஸ் வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட போறோம்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Rajasthan #Locust Attack
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment