ராஜஸ்தான் மாநிலத்தில் நவராத்திரி ஊர்வலம் சென்றபோது மின்சாரம் தாக்கி ஒரு பெண் உட்பட 17 குழந்தைகள் தீக்காயகங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு குழந்தை மிகவும் கலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மகாசிவராத்தி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்து, சிவபக்தர்கள் சிவனை வழிபடுபவது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த சிவராத்திரி நாள் ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாட்டங்களில் வேறுபாடுகள் இருக்கிறது. அந்த வகையில் ராஜஸடதான் மாநிலத்தில் சிவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க : 17 children suffer electric burns in Rajasthan’s Kota while collecting water for Shivratri event
ராஜஸ்தானின் கோட்டாவில் காளி பஸ்தி பகுதியில் காலை 11 மணியளவில் சிவராத்திரி விழாவின் ஊாவலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தில், ஒரு கோவிலில் இருந்து மற்றொரு கோவிலுக்கு கலசம் ஏந்திச்செல்லும் போது, பல குழந்தைகள் இரும்புக்கம்பியில் கொடி ஏற்றி அதை ஏந்திச்சென்றுள்ளனர். இப்போது இவர்கள் நடந்து சென்ற ஒரு காலனி பகுதியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் குழந்தைகள் இரும்பு கம்பியில் ஏற்றப்பட்ட கொடியை உயர்த்தி பிடிக்கும்போது, அந்த இரும்புக்கம்பி, உயர் மின் அழுத்த கம்பியில் மோதியதால், ஒரு பெண்ணுடன் சேர்த்து 17 குழந்தைகளும் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்தனர். உடனடியாக இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தைக்கு மட்டும் 70% தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் எம்.பி.எஸ் மருத்துவமனையில் குழந்தைகள் அனுமுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அனைவருமே 9 முதல் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கலெக்டர் ரவீந்திர கோஸ்வாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். ராஜஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் ஹீரலால் நாகரும் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இது ஒரு சோகமான சம்பவம். இது தொடர்பாக சம்பவம் நடந்த பகுதுியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். ஒரு குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் வேறு எந்த மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், நாங்கள் அதை செய்வோம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“