மாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய முதல்வர்

By: Updated: July 21, 2018, 03:17:47 PM

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருக்கும் பொதுமக்கள், மாடுகளை கடத்த வந்தவர்கள் என்று கூறி இருவரை தாக்கியுள்ளார்கள்.

அக்பர் மற்றும் அஸ்லாம் என்ற இரு நபர்கள், தங்களின் தேவைக்காக மாடுகள் இரண்டினை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் தங்களின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

சந்தைகளில் இருந்து வாங்கப்படும் மாடுகளை வீட்டில் சேர்க்க கால்நடையாக வந்துள்ளனர்.

ஆல்வர் மாவட்டத்தில் அவர்கள் கடந்து செல்லும் போது, அவர்களை விசாரிக்க கிராமத்தினர் ஒன்று கூடியுள்ளனர்.

கூட்டத்தினைப் பார்த்த இருவரும் பயந்து நடுங்கி ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அஸ்லாம் அங்கிருந்து தப்பித்துவிட்டார். ஆனால் அக்பர் கிராம மக்களின் தாக்குதலுக்கு ஆளானதோடு, காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனை அறிந்த ராஜஸ்தானின் முதலமைச்சர் வசுந்த்ரா ராஜே , தன்னுடைய ட்விட்டர் பதிவில் கடுமையான கண்டனத்தினை பதிவு செய்திருக்கிறார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவில் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறை அதிகாரியினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, 143, 341, 323 மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்து, தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rajasthan man lynched by villagers in alwar on suspicion of cow smuggling

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X