அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னதாக, ராஜஸ்தான் அமைச்சர்கள் குழுவின் கூட்டம் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நடந்தது. இந்தநிலையில், பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிந்த் சிங் தோதாஸ்ரா, ஹரிஷ் சவுத்ரி மற்றும் ரகு ஷர்மா ஆகியோர் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தனர்.
முன்னதாக சனிக்கிழமை, அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான அஜய் மக்கன் மற்றும் பிசிசி தலைவர் தோதாஸ்ரா ஆகியோர் கிசான் விஜய் திவாஸ் கூட்டத்தில் உரையாற்றினர். அதன் பிறகு, அஜய் மக்கன் மற்றும் கெலாட் ஹோட்டலில் சந்தித்தினர்.
நேற்று இரவு ஜெய்ப்பூர் வந்த அஜய் மக்கன், கட்சிக்காக உழைக்க விரும்பும் மூன்று அமைச்சர்களின் ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் கூறினார். இவர்களில் தோதாஸ்ரா பிசிசி தலைவராக உள்ளார், ஹரிஷ் சவுத்ரி மற்றும் ரகு சர்மா ஆகியோர் முறையே பஞ்சாப் மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுக்கு அரசாங்கத்தில் இடமளிக்க வேண்டும் என்று கோரியதால், பல மாதங்களாக அமைச்சரவை மறுசீரமைப்புக்கான கூச்சல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தவிர, அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேட்சைகள் மற்றும் பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய எம்எல்ஏக்களும் அமைச்சரவை மாற்றத்தில் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சச்சின் பைலட் முதலமைச்சராவார் என்று சச்சின் பைலட் தரப்பு எதிர்பார்த்தது. அவரது தரப்பில் உள்ள சிலர் தேர்தலுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது நடக்க வேண்டும் என்று விரும்பினர். அது இப்போது என நினைக்கின்றனர். பஞ்சாப் போன்ற குழப்பத்தை தவிர்க்க, மற்றும் சச்சின் பைலட் நல்ல முறையில் ஆட்சி அமைத்து, அதன் அடிப்படையில் 2023 இல் மீண்டும் வாக்கு கேட்க இதுதான் சரியான தருணம் என்று கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு, சச்சின் பைலட் அவர் உட்பட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதனையடுத்து பைலட்டை துணை முதல்வர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதவிகளில் இருந்து கட்சி நீக்கிய நிலையில், அவரது விசுவாசியான விஸ்வேந்திர சிங் சுற்றுலாத் துறை அமைச்சரிலிருந்தும், ரமேஷ் மீனா உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சரிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
நெருக்கடி ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இரு பிரிவினரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை இந்த பிரச்சனையில் தலையிட்டது. ஆகஸ்ட் 2020 இல் சமாதானத்தைத் தொடர்ந்து இருவரும் கைகுலுக்கிய பிறகு, கெலாட்டின் அமைச்சரவையில் பைலட்டின் விசுவாசிகளுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கெலாட் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதை இதுவரை எதிர்த்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil