Rajasthan, MP, Chhattisgarh, Mizoram, Telangana Election Exit Poll 2018 : அடுத்த வருடம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது தற்போது நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில தேர்தல்கள். இந்த மாநிலங்களில் வெற்றி பெரும் கட்சியினைப் பொறுத்தே மக்களின் மனதில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள இயலும்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் ( Rajasthan, MP, Chhattisgarh, Mizoram, Telangana Election Exit Poll 2018)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஜேசிசி கூட்டணி (மாயாவதி – அஜித் ஜோகி), காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முணை போட்டி நிலவி வந்தது. இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 88 தொகுதிகளில் முதற்கட்டமான நவம்பர் 12ம் தேதி 18 தொகுதிகளிலும், நவம்பர் 20ம் தேதி மீதம் இருந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.
மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 28ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவிலும் நேற்று தேர்தல்கள் நடத்தப்பட்டது. தேர்தலின் முடிவுகள் வருகின்ற 11ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவுகளை தற்போது ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன.
கருத்து கணிப்பு முடிவுகள் - மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்
சில தேசிய ஊடகங்கள் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த 15 வருடங்களாக பாஜகவின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின் படி நான்கில் மூன்று கருத்துக் கணிப்புகள் (Rajasthan, MP, Chhattisgarh, Mizoram, Telangana Election Exit Poll 2018) காங்கிரஸ் இம்முறை மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. இரண்டு கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/chathi.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/madhya-pradesh-2.jpg)
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி 2013ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது வெளியான கருத்துக் கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ்ஸிற்கு சாதகமாக வந்துள்ளது. ராஜஸ்தானில் சுமார் 4.77 கோடி வாக்களர்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 189 பெண்கள் உட்பட 2247 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/rajasthan.jpg)
தெலுங்கானா
119 தொகுதிகளைக் கொண்டுள்ள தெலுங்கானாவில் இம்முறையும் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தெலுங்கு தேசம் கட்சி, சிபிஐ மற்றும் தெலுங்கானா ஜன் சமிதி கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/tela.jpg)
ஏன் இந்த ஐந்து மாநில தேர்தல்கள் முக்கியம் ?
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இழந்த இடங்களையும் நம்பிக்கையினையும் திரும்பபெறும் காங்கிரஸ் என்பது மறுக்க இயலாத உண்மை.
2014ம் ஆண்டிற்கு பின்பு இந்தியாவில் 22 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. பஞ்சாப் மற்றும் புதுச்சேரி என இரண்டு இடங்களில் மற்றுமே வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ். 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ்.
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மொத்தம் 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளை தக்கவைத்துள்ளது பாஜக. இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும் என்பதை யூகிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.