ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மாவட்டங்கள் உட்பட 19 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று பிரிவுகளை உருவாக்குவதாக சட்டசபையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, இது தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களை நிறைவேற்றும் முயற்சி. புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் பல முக்கிய உண்மைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய மாவட்டங்களை உருவாக்குவதால், விஷயங்களை எளிதாக்குவதை விட, மக்கள் நிர்வாக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்றார்.
அசோக் கெலாட் அறிவிப்பின் படி, ஜெய்ப்பூர் இப்போது நான்கு சிறிய மாவட்டங்களாக பிரிக்கப்படும்: அதன்படி ஜெய்ப்பூர் வடக்கு, ஜெய்ப்பூர் தெற்கு மற்றும் டுடு. ஜெய்ப்பூரின் ஒரு பகுதியாக இருக்கும் கோட்புட்லி, அல்வாரில் உள்ள பெஹ்ரோருடன் இணைக்கப்பட்டு மற்றொரு மாவட்டம் உருவாக்கப்படும்.
முதல்வரின் சொந்த ஊரான ஜோத்பூர், ஜோத்பூர் கிழக்கு, ஜோத்பூர் மேற்கு மற்றும் பலோடி என பிரிக்கப்படும்.
அனுப்கர் (கங்காநகர்), பலோத்ரா (பார்மர்), பீவார் (அஜ்மீர்), டீக் (பாரத்பூர்), தீத்வானா – குச்சமன் (நாகூர்), கங்காபூர் நகரம் (சவாய் மாதோபூர்), கெக்ரி (அஜ்மீர்), கைர்தல் (அல்வார்), நீம் கா தானா (சிகார்) , சலம்பர் (உதைபூர்), சஞ்சோர் (ஜலோர்), மற்றும் ஷாஹ்புரா (பில்வாரா), ஆகிய மற்ற புதிய மாவட்டங்கள், தற்போதுள்ள மாவட்டத்துடன் இருக்கும். கூடுதலாக, பன்ஸ்வாரா, பாலி மற்றும் சிகார் மூன்று புதிய பிரிவுகள் ஆகும்.
இதன் மூலம் மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும்.
இதுகுறித்து கெஹ்லாட் கூறுகையில், புவியியல் பார்வையில், ராஜஸ்தான் மிகப்பெரிய மாநிலமாகும், இதன் காரணமாக, இதன் காரணமாக, தலைமையகம் இருக்கும் இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல மாவட்டங்கள் உள்ளன.
இதனால் சாமானியர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை இருப்பதால், நிர்வாகம் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைவதில் சிரமம் உள்ளது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“