ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சட்டசபையில் மாநில அரசை விமர்சித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ராஜேந்திர குதாவை அவரது அரசாங்கத்தில் அமைச்சர் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கினார்.
வெள்ளிக்கிழமை மதியம் ராஜஸ்தான் குறைந்தபட்ச உத்தரவாத வருமான மசோதா மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.
அப்போது, குதா எழுந்து, “ராஜஸ்தானில், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் நாம் தோல்வியடைந்தோம் என்பதே உண்மை. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதம் அதிகரித்துள்ளது, மணிப்பூரைப் பற்றி பேசுவதை விட நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும், என்று பேசினார்.
இதைக் கேட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெட்கக்கேடு! அவமானம்!" என்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில்: ஒரு அமைச்சர் பேசினால், ஒட்டுமொத்த அரசும் பேசுகிறது என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது. ஒரு அமைச்சர் அரசாங்கத்தை அம்பலப்படுத்தியுள்ளார். நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன், என்றார்.
இந்த சூழலில் வெள்ளிக்கிழமை மாலை, ‘இன்று ஜூலை 21 மாலை, மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை வெளியேற்ற முதல்வர் அசோக் கெலாட் பரிந்துரைத்தார். முதல்வர் கெலாட்டின் இந்த பரிந்துரையை ஆளுநர் திரு (கல்ராஜ்) மிஸ்ரா உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்’ என்று ராஜ் பவனில் இருந்து ஒரு அறிக்கை வந்தது.
சைனிக் கல்யாண், ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் இலாகாக்களை குதா வகித்தார்.
அவரது பதவி நீக்கம் குறித்து பேசிய குதா, “எனக்கு ஆச்சரியமில்லை, அவர்களிடமிருந்து நான் வேறு எதுவும் எதிர்பார்க்க இல்லை. உண்மையைப் பேசுவதற்கான பரிசு இதுதான். ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது... அவர்கள் எனக்கு எதிராக பொய் வழக்குகளை பதிவு செய்த விதத்தை மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். எல்லாவற்றையும் திங்கட்கிழமை சொல்கிறேன்…
மணிப்பூர் பிரச்னையில் எங்கள் எம்எல்ஏக்கள், இறங்கி போராட்டம் நடத்தினர், நான் அவர்களுடன் உடன்படுகிறேன். ஆனால் ராஜஸ்தானில் நடப்பது எப்படி சரியாக இருக்கும்? நாம் தினமும் சாட்சியாக இருக்கிறோம் அல்லவா? என்று குதா சொன்னார்.
இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திரும்ப விரும்புவதால் தான் சண்டையிடுவதாக கூறப்பட்டதை அவர் மறுத்தார்.
சச்சின் பைலட் அணியின் தலைவராகக் கருதப்படும் குதா, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து கெலாட் அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார். இந்த மே மாதம் ஜெய்ப்பூரில் நடந்த பைலட் பேரணியில், ’ராஜஸ்தான் அரசின் சீரமைப்பு தவறாகிவிட்டது. ஊழலின் அனைத்து எல்லைகளையும் நம் அரசு கடந்துவிட்டது. கர்நாடகாவில் 40 சதவீதம் (கமிஷன்) வசூலிக்கப்பட்டது, ஆனால் இங்கு நம் அரசு அதையும் மீறி சென்றுள்ளது’, என்று கடுமையாக பேசினார்.
மேலும் அமைச்சர்கள் சாந்தி தரிவால், பிரமோத் பயா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ஆகியோர் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“