சபரிமலை விவகாரம்: தேர்தலுக்கான நாடகமா? பினராயி விஜயன், ஸ்டாலின் மீது கேரள பா.ஜ.க. கடும் தாக்கு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்து மதத்தையும், சபரிமலை ஐயப்பன் பக்தர்களையும் அவமதித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்து மதத்தையும், சபரிமலை ஐயப்பன் பக்தர்களையும் அவமதித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Kerala BJP chief warns

சபரிமலை விவகாரம்: தேர்தலுக்கான நாடகமா? பினராயி விஜயன், ஸ்டாலின் மீது ராஜீவ் சந்திரசேகர் கடும் தாக்கு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் இந்து மதத்தையும், சபரிமலையின் புனித மரபுகளையும் அவமதித்ததாக பா.ஜ.க. தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

கேரளாவில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஐயப்ப சங்கமம் என்ற மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இந்நிகழ்வில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து ராஜீவ் சந்திரசேகர் இந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்நிகழ்வை “மக்களை முட்டாளாக்கும் நாடகம்” என்று விமர்சித்த சந்திரசேகர், இந்துகளையும், ஐயப்ப பக்தர்களையும் அவமதித்ததற்காக 2 முதல்வர்களும் பகிரங்கமாக மன்னிப்புகேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் சந்திரசேகரின் ட்வீட்

ராஜீவ் சந்திரசேகர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “இது பினராயி விஜயன் மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களிடமிருந்தும், கேரள மற்றும் தமிழக இந்துக்களிடமிருந்தும் ஒரு தெளிவான செய்தி. நீங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சபரிமலை, ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மதத்தை அவமதித்துள்ளீர்கள்.

பினராயி விஜயன் ஐயப்ப பக்தர்களைச் சிறையில் அடைத்துள்ளார்; பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸ் வன்முறையை ஏவி, சபரிமலையின் புனித மரபுகளை மீறி, அவமதித்துள்ளார். மு.க.ஸ்டாலின், அவரது வாரிசும், பயனற்றவருமான அவரது மகன், இந்து மதத்தை வைரஸ் என்று குறிப்பிட்டு, இந்துக்களை மீண்டும் மீண்டும் அவமதித்துள்ளனர். இவையெல்லாம் ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒருபோதும் மறக்கப்படவோ, மன்னிக்கப்படவோ மாட்டாது. எனவே, தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் ஐயப்ப சங்கமம் என்ற நிகழ்ச்சியைக் கொண்டாடுவது என்பது நாடகம், இது 'மக்களை முட்டாளாக்கும்' யுக்தியின் ஒரு பகுதி.

கோரிக்கைகளும் எச்சரிக்கையும்

Advertisment
Advertisements

பினராயி விஜயன், ஐயப்ப பக்தர்கள் மீதுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சபரிமலை மரபுகளை மீறியதற்காக ஐயப்பனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினால், அவர்கள் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டு, ஐயப்பனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது ட்வீட்டில், “பினராயி மற்றும் ஸ்டாலின் இருவரும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்க வேண்டுமென்றால், அவர்கள் இந்துகளிடமும், சபரிமலை ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கோருவதே ஒரே வழி. பினராயி விஜயன் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று, சிறைவாசம் அனுபவித்த பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சபரிமலை மரபுகளை மீறியதற்காக ஐயப்பனிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

ஸ்டாலினும், அவரது பயனற்ற வாரிசான உதயநிதியும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டு, ஐயப்பனிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதைச் செய்யாமல், ஸ்டாலினோ அல்லது பினராயியோ சபரிமலை பக்தர்களையும், அவர்களின் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயன்றால், கேரள பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் எதிர்த்து நிற்போம்.

இந்த விவகாரத்தில் எங்கள் உறுதியை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை தூண்டிவிட வேண்டாம். முதலில் மன்னிப்பு கேளுங்கள், பிறகு உங்கள் சந்தர்ப்பவாத அரசியலை செய்யுங்கள். எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ இந்துக்களின் நம்பிக்கையையோ அல்லது வேறு எந்த மத நம்பிக்கையையும் அவமதிக்க பா.ஜ.க. அனுமதிக்காது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: