Advertisment

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் vs கேரள அரசு: நீண்ட கால தொடர்கதை

மாநிலங்களவை உறுப்பினரான சில மாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் சந்திரசேகர் ஏசியாநெட் சேனல்களில் (ஏசியாநெட், ஏசியாநெட் நியூஸ் மற்றும் ஏசியாநெட் பிளஸ்) பங்குகளை வாங்கினார்.

author-image
WebDesk
New Update
Kerala

Union MoS Rajeev Chandrasekhar vs Kerala govt: A long-running saga

கேரளாவில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் சந்திரசேகர் மீது அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே கசப்பான கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

முதலில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர், ஏசியாநெட் நியூஸில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். சந்திரசேகருக்கும், விஜயன் அரசுக்கும் அடிக்கடி பூசல் வருவது தொலைக்காட்சி சேனல் வழியாகத்தான்.

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தனது கருத்துக்களில் பகைமையை ஊக்குவித்ததாக ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், "இஸ்லாமிய அடிப்படைவாதம்" தொடர்பாக கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) மீதும் குறிவைத்துள்ளார்.

இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் மீது "தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக" வழக்குப் பதிவு செய்துள்ளதாக பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரான சில மாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் சந்திரசேகர் ஏசியாநெட் சேனல்களில் (ஏசியாநெட், ஏசியாநெட் நியூஸ் மற்றும் ஏசியாநெட் பிளஸ்) பங்குகளை வாங்கினார். அவர் கர்நாடகாவில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வரை 2018 வரை அவையில் சுயேச்சை உறுப்பினராக இருந்தார். அவர் ஜூலை 2021 இல் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

சேனல் அதன் பிரதிநிதிகளுக்கு அவர்களின் கருத்துக்களை ஒளிபரப்ப இடமளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஜூலை 2020 இல், சிபிஐ(எம்) ஏசியாநெட் நியூஸில் செய்தி விவாதங்களைப் புறக்கணிப்பதாக அறிவித்தது, பிறகு அந்த ஆண்டு அக்டோபரில் அந்தப் புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.

ஏப்ரல் 2022 இல், CPI(M) மற்றும் Asianet இடையே மற்றொரு மோதல் ஏற்பட்டது. சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினரும், ராஜ்யசபா எம்பியுமான எளமரம் கரீன், கட்சி நடத்திய பாரத் பந்த் குறித்த குழு விவாதத்தின் போது, ​​கேள்விகள் மூலம் அவருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டியதாக ஏசியாநெட் செய்தி தொகுப்பாளர் வினு வி ஜான் மீது போலீஸ் புகார் அளித்தார்.

ஜானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ(எம்) சிஐடியு தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றன. இதையடுத்து அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இப்போது சேனலை புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டாலும், ஜான் தொகுத்து வழங்கும் செய்தி விவாதங்களை CPI(M) தொடர்ந்து புறக்கணிக்கிறது.

ஜூலை 2022 இல், தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவ மோர்ச்சா தொழிலாளி பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்ட பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் கேரளா பதிவு செய்யப்பட்ட பைக்கைப் பயன்படுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.

அப்போது ராஜீவ், "வெறுக்கத்தக்க கொலைகளை" செய்த தீவிர சக்திகளுக்கு மாநிலம் "பாதுகாப்பான புகலிடமாக" மாறிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது தடை செய்யப்பட்டுள்ள PFI மற்றும் அதன் அரசியல் பிரிவான SDPI, கேரள அரசில் சில தரப்பினரிடமிருந்து அரசியல் பாதுகாப்பை அனுபவிக்கின்றனர், என்று சந்திரசேகர் கூறினார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், சிபிஐ(எம்) மாணவர் சங்கத் தலைவர் அர்ஷோ பிஎம் அளித்த புகாரின் பேரில், ஏசியாநெட் நியூஸின் பத்திரிகையாளர் மற்றும் எர்ணாகுளத்தில் அரசு நடத்தும் மகாராஜா கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அர்ஷோ, தேர்வில் பாஸ்ஆகிவிட்டதாக ஆரம்ப முடிவுகள் வெளியிட்ட பிறகு கல்லூரியால் தோல்வி’ அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் அகிலா நந்தகுமாருக்கு எதிராக சதி, மோசடி, அவதூறு மற்றும் பொது ஒழுங்கை மீறுதல் மற்றும் இடையூறு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, பத்திரிகையாளர் மீதான வழக்கை போலீசார் கைவிட்டனர்.

இதனிடையே கடந்த ஆண்டு மைனர் பெண்ணைப் பயன்படுத்தி சேனல் போலியான செய்தியை ஒளிபரப்பியதாக சிபிஐ(எம்) ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் பிவி அன்வர் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில்- சமீபத்தில், ஏசியாநெட் நியூஸ் நிர்வாக ஆசிரியர் சிந்து சூர்யகுமார், அதன் கோழிக்கோடு மண்டல ஆசிரியர் ஷாஜஹான் கலியாத் மற்றும் கண்ணூர் நிருபர் நௌஃபல் பின் யூசுப் ஆகியோர் மீது POCSO சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட த்தின் (IPC) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சேனலின் கோழிக்கோடு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது, ஆனால் இன்னும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை.

அதே விவகாரத்தில், ​​CPI(M)ன் மாணவர் பிரிவான SFI யின் செயல்பாட்டாளர்கள் கொச்சியில் ஏசியாநெட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அதே நேரத்தில் CPI(M) ன் இளைஞர் பிரிவான DYFI சேனலின் "கிரிமினல் ஜர்னலிசத்திற்கு" எதிராக மாநிலத்தின் 14 மாவட்டத் தலைமையகங்களிலும் மாநாடுகளை நடத்தியது.

சுவாரஸ்யம் என்னவென்றால், சந்திரசேகர் சேனலில் தனது பங்குகளை வாங்கியது உட்பட ஏசியாநெட் நியூஸுடன் கேரளா பாஜகவும் மோதிக்கொண்டது.

2015 இல், சேனலில் "இடது பின்னணி கொண்ட பத்திரிகையாளர்கள்" ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி, ஏசியாநெட் நியூஸைப் புறக்கணிப்பதாக மாநிலப் பிரிவு அறிவித்தது,

இது சில மாதங்கள் நீடித்தது.

2021 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சரும், கேரள பாஜக மூத்த தலைவருமான வி முரளீதரன் தனது அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்புகளில் ஏசியாநெட் நியூஸ் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்தார். மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மலையாள சேனலைப் புறக்கணிப்பதாகக் கூறினார்.

2023 ஜூலையில் தான், சேனலுடனான தனது இரண்டு வருட ஒத்துழையாமையை முடிவுக்குக் கொண்டுவர பாஜக முடிவு செய்தது.

அப்போது கட்சியின் மாநிலச் செயலாளர் கே.சுரேந்திரன், சமகால மாநில அரசியலின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், “கேரளாவில் இடதுசாரி அரசாங்கத்தால் வேட்டையாடப்படும்ஊடகங்களுடன் நிற்க பாஜக உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

Read in English: Union MoS Rajeev Chandrasekhar vs Kerala govt: A long-running saga

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment