டெல்லி ரகசியம்: இளம் தொழில்முனைவோருக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுத்த மத்திய அமைச்சர்

இந்தியாவின் 62வது மையத்தின் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் துவக்க விழாவில், மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு இளம் தொழில்முனைவோருக்கு மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கினார்.

அமைச்சர்கள் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அப்படி செல்கையில் தொழில்முனைவோருக்கு அட்வைஸ் கொடுப்பது மிகவும் அரிதான செயல் ஆகும்.

செவ்வாயன்று மீரட்டில் நடைபெற்ற இந்தியாவின் 62வது மையத்தின் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் துவக்க விழாவில், மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு இளம் தொழில்முனைவோருக்கு மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கினார்.

விவசாயிக்கு மண் விவரங்களை சேகரிக்கும் கருவி குறித்து தனது திட்டத்தை அமைச்சருக்கு இளம் தொழில்முனைவோர் எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், “நான் உங்களுக்கு ஒரு ஆலோசனையை இலவசமாக வழங்க முடியும்.” விவசாயிக்கு மண்ணின் தரம், தண்ணீரின் அளவு மற்றும் அவரது பயிருக்கு தேவையான உரம் போன்ற மதிப்புமிக்க தகவல்களை வழங்க உதவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அமைச்சரின் ஆலோசனை தொழில்முனைவோர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

கஃபே திட்டம்

எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO) கட்டப்பட்ட 27 திட்டங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். முன்னதாக, ஜூன் மாதத்தில் சிங் 75 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.அதன் இந்த காலாண்டில் தொடங்கி வைக்கப்பட்ட மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சீன எல்லையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆயுதப்படைகளுக்கு வசதி செய்வதற்கும் BRO-இன் மற்றொரு முயற்சியை சிங் அறிவித்தார். அதாவது, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’நிகழ்வின் ஒரு பகுதியாக 75 BRO கஃபேக்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். உள்ளூர் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் இந்த கஃபே, உணவு, பார்க்கிங், இருக்கை, மருத்துவ பரிசோதனை அறைகள் மற்றும் புகைப்பட காட்சியகங்கள் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி இணைப்பு

பயோலோஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, அந்நிறுவனத்துக்கு பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் துணை-அலகு புரோட்டீன் கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் பயாலஜிக்கல் இ துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றிய காலம் என்பதால் ஸ்வரூப்புக்கு இது ஒரு பெருமையான தருணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பயோடெக்னாலஜி துறையின் கீழ் உள்ள டிரன்ஸ்லேஷன் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறித்த முக்கியமான தரவுகளை வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் மருத்துவ பரிசோதனைக்கு உதவியாக அமைந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajeev chandrashekhar offers advice free of cost to a young entrepreneur

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express