‘என் அன்பான தோழியை இழந்துவிட்டேன்’! – ரஜினிகாந்த் இரங்கல்

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி, ’16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்தவர். மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். நான் எனது அன்பான தோழியை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு உண்மையான நடிகையை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் வலியை நான் உணர்கிறேன். உங்களை இழந்துவிட்டோம் ஸ்ரீதேவி” என்று வேதனையோடு ட்வீட் செய்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth condolence for sridevi

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com