Rajiv Gandhi 28th death anniversary : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 28வது நினைவு தினம் இன்று. 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார். மே 221ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்கொலைப்படையினரால் கொல்லப்பட்டார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அரங்கேறி 28 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் அஸ்தியானது கேரள மாநிலம், வயநாட்டில் இருக்கும் திருநெல்லி பாபநாசினி அணையில் கரைக்கப்பட்டது.
டெல்லியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தியின் நினைவிடம் வீர் பூமியில் அவரின் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மற்றும் ப்ரியங்கா காந்தி இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தேசம் எங்கும் உள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இந்த நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Rajiv Gandhi 28th death anniversary - ராகுல் காந்தியின் உருக்கமான ட்வீட்
என் தந்தை மென்மையானவர், அமைதி, மற்றும் அன்பானவரும் கூட. அனைவரையும் மதிக்கவும், அவர்கள் மீது அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுத்தவர். யாரையும் வெறுக்க கூடாது என்றும், அனைவரையும் மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தவர் என்று ட்வீட் செய்துள்ளார்.
My father was gentle, loving, kind & affectionate. He taught me to love & respect all beings. To never hate. To forgive.
I miss him.
On his death anniversary, I remember my father with love & gratitude.#RememberingRajivGandhi pic.twitter.com/sYPGu5jGFC
— Rahul Gandhi (@RahulGandhi) 21 May 2019
இன்று காலை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய காட்சிகள்
Former Prime Minister Dr Manmohan Singh, UPA Chairperson Smt Sonia Gandhi, Congress President @RahulGandhi and General Secretary @priyankagandhi pay homage to former Prime Minister Rajiv Gandhi on his death anniversary. #RememberingRajivGandhi pic.twitter.com/bmerpRSeRE
— Congress (@INCIndia) 21 May 2019
ப்ரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டரில் நீங்கள் தான் என்னுடைய ஹீரோ என்று ட்வீட் செய்துள்ளார். ராஜீவ் காந்தி நேருவில் பேரனும், இந்திரா காந்தியின் மகனும் ஆவார். இந்திரா காந்திக்குப் பிறகு அரசியல் வாரிசாக உருவெடுத்தவர் சஞ்சய் காந்தி. ஆனால் 1980ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.
You will always be my hero. pic.twitter.com/LYPciCD234
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) 21 May 2019
அதனைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு இந்திரா காந்தியும் தன்னுடைய பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டார். பின்னர் கட்சிப் பணிகளை மேற்கொண்டார் ராஜீவ் காந்தி. அப்பழுக்கற்ற உண்மையான அரசியல்வாதி என்று ஊடகங்களால் போற்றப்பட்டவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.