ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளான இன்று(ஆக.20) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தி தான் நேரு-காந்தி குடும்பத்தின் கடைசி இந்திய பிரதமராக பதவி வகித்தவர். சகோதரர் சஞ்சய் காந்தியின் அகால மரணத்தின் விளைவால், அரசியலுக்குள் நுழைந்த ராஜீவ் காந்தி குறித்த சில தகவல்களையும், புகைப்படங்களையும் இங்கே பார்ப்போம்.
பொறியியலாளர் டூ விமானி
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1666-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1667-300x217.jpg)
லண்டனில் தனது A-லெவல்களை முடித்த பிறகு, காம்ப்ரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார் ராஜீவ். இருப்பினும், மூன்று வருடம் கழித்து டிகிரி முழுவதும் முடிக்காமல், லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கச் சென்றார், ஆனால் அதையும் முழுதாக அவர் படிக்கவில்லை. பின்னர் ஒருமுறை "தேர்வுகளுக்கு முணுமுணுப்பதில்" விருப்பமில்லை என்பதை ராஜீவ் ஒப்புக் கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1668-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1669-300x217.jpg)
அதன்பிறகு, டெல்லியில் உள்ள விமான ஓட்டி பயிற்சி கிளப்பில் இணைந்து, பைலட்டாக பயிற்சிப் பெற்றார். 1970ல், ஏர் இந்தியாவில் அவருக்கு வேலை கிடைத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1670-300x217.jpg)
இந்தியாவின் இளம் பிரதமர் ராஜீவ் காந்தி புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் என்பது மிகச் சிலருக்கு தான் தெரியும். அவரது பல புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட, ஒரு வெளியீட்டாளர் தொடர்ந்து அவரை வற்புறுத்தியும், கடைசி வரை ராஜீவ் மறுத்து வந்தார். ஆனால், அவர் மறைவுக்கு பிறகு, சோனியா காந்தி "“Rajiv’s world: Photographs by Rajiv Gandhi” புத்தகத்தில் அந்த புகைப்படங்களை வெளிக் கொண்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1671-300x217.jpg)
பெரும்பாலும் தனது காரை தானே இயக்கும் ஒரே இந்திய பிரதமராக வலம் வந்தவர் ராஜீவ் காந்தி. தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட, தனது காரை அவரே இயக்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1672-300x217.jpg)
அரசியலுக்கு வருவதில் ஆர்வம் இல்லாதவராகவே ராஜீவ் காந்தி இருந்தார். அவரது சகோதரர் சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு தாய் இந்திரா காந்திக்கும், ராஜீவ் காந்திக்கும் ஆறுதல் தெரிவித்த சங்கராச்சாரிய சுவாமி ஸ்ரீ ஸ்வரூபானந்த் சுவாமிகள், "இனி ராஜீவ் தொடர்ந்து விமானம் ஓட்டக் கூடாது" என இந்திராவிடம் தெரிவித்தார். மேலும், "கடவுளிடம் யார் ஒருவர் தன்னை அர்ப்பணிக்கிறாரோ, அவரை அந்த கடவுள் பார்த்துக் கொள்வார்" என்று தெரிவிக்க, அந்த நம்பிக்கை தான் நாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்க ராஜீவ் காந்தியை தூண்டியது.