Arun Janardhanan
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் பேரரறிவாளனின் விடுதலை குறித்து இறுதி முடிவை ஆளுநர் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான முடிவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தான் எடுக்க முடியும் என்று பன்வாரிலால் ப்ரோஹித் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. “அதில், இந்த முன்மொழிவை மத்திய அரசு பெற்றது. சட்டத்தின் படி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ம் தேதி அன்று பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் விடுதலை தொடர்பான முடிவை எடுக்க எடுத்துக் கொண்ட காலம் அசாதரணமானது என்று குறிப்பிட்டது. இந்த விவகாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு அறிவிதது. ஜனவரி 25ம் தேதி மத்திய அரசிடம் பேசிய ஆளுநர் அலுவலகம், இது தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்செயலாக, வியாழக்கிழமை அன்று இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில் அவர் ஆளுநரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசு முதலில் 1991ம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் 7 நபர்களுக்கும் மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்தது. 2018ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர்களுக்கு பரோல் கூட இல்லை. உச்ச நீதிமன்றம், விடுதலை மனு தொடர்பாக விசாரித்த போது, விடுதலைக்கு அவர் தகுதியானவரா என்பதை ஆளுநர் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். அதனையே உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் மத்திய அரசு அஃபிடவிட் தாக்கல் செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
1999ம் ஆண்டு ஏழு நபர்களின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்த (ஓய்வு பெற்ற) நீதிபதி கே.டி. தாமஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, ஆளுநர், முடிவை குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பது இதற்கு முன்பு கேள்விப்படாதது. “மாநில அரசு வெகுநாட்களுக்கு முன்பே முடிவெடுத்த நிலையிலும் ஏன் அவர் இவ்வாறு செய்கிறார்? இது தொடர்பாக முடிவை ஆளுநர் தான் எடுக்க வேண்டும். குடியரசு தலைவர் அல்ல. இது அவரின் பொறுப்பு. 28 மாதங்களாக முடிவு எடுக்காமல் தற்போது இவர் இப்படி செய்திருப்பது இந்திய அரசியலமைப்பிற்கு ஏற்றதாக இல்லை என்று கூறினார்.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த செயல்பாட்டை சட்டத்திற்கு விரோதமானது என்றார். இரண்டு விருப்பங்கள் மட்டுமே முன் வைக்கப்பட்டது. ஒன்று விடுதலை அல்லது விடுவிக்க மறுப்பது. தற்போது மூன்றாவது விருப்பதை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் இதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கூறிய நிலையில், குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிலை எவ்வாறு உருவானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனவரி 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமையேற்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். “இது ஒரு அசாதாரண பிரச்சினை.”
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட்டில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், மத்திய அரசு, சி.பி.ஐக்கும் இந்த ஏழு நபர்களின் விடுதலைக்கும் தொடர்பில்லை என்றும், தமிழக ஆளுநர் இதில் முடிவை எடுக்கலாம் என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டு மன்னிப்பு கோரி மனுவை தாக்கல் செய்தார் பேரறிவாளன். ஆனால் அவரின் மனு பரிசீலிக்கப்படவில்லை. 2018ம் ஆண்டு இது தொடர்ர்பான மனுவில், முடிவை எடுக்க வேண்டியது ஆளுநர் தான் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மூன்று நாட்களில் 7 நபர்களுக்கும் விடுதலை வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்தது.
வியாழக்கிழமை சட்டமன்றத்தில் பேசிய பழனிசாமி, திமுகவின் அரசியல் நாடகம் என்று குறிப்பிட்டு, 7 பேர் விடுதலை தொடர்பாக நாங்கள் சிறப்பாக பங்காற்றுகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார். திமுக அரசு காலத்தில் நளினியின் மரண தண்டனையை மட்டுமே மாற்ற முடிந்தது. மேலும் அதிமுக மற்ற அனைத்து நபர்களுக்கும் விடுதலை வாங்க முயற்சிக்கிறது என்று கூறினார். 2014ம் ஆண்டு ஜெயலலிதா இவர்களின் விடுதலை தொடர்பாக முடிவு எடுத்து பின்னர் மத்திய அரசின் கருத்தை நாடிய போது, உச்ச நீதிமன்றம் இம்முடிவை எடுத்தது என்று பழனிசாமி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil