கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 1985 ஆம் ஆண்டு பிரதமராக இருண்டஹ் ராஜீவ் காந்தியின் புகழ்பெற்ற கருத்தை மேற்கோள் காட்டினார், அரசாங்கம் நலன் மற்றும் வறுமை ஒழிப்புக்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும், 15 பைசா மட்டுமே பயனாளியை சென்றடைவது நோக்கம் என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சுமார் நாற்பது ஆண்டு கால கருத்து குறித்த பிரதமர் மோடியின் பேச்சு, கர்நாடகாவில் பொதுப் பணி ஒப்பந்தங்கள் வழங்குவதில் பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. மேலும், துறைகளைக் குறைத்து, திட்டங்களுக்கு பா.ஜ.க அரசில் அதிகாரிகளுக்கு 40% கமிஷன் ஒப்பந்தக்காரர்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் அரசாங்கங்கள் ஊழலுக்கு ஆதாரம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பேச்ய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைத் தாக்கி, ஊழலைப் பற்றி பேச காங்கிரஸுக்கு உரிமை இல்லை என்று கூறினார்.
1985 ஆம் ஆண்டில் - ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு - ஒடிசாவின் வறுமை மற்றும் மிகவும் பின்தங்கிய கலாஹண்டி மாவட்டத்திற்கு வருகை தந்த பின்னர், அங்குள்ள குழந்தைகளின் பட்டினி மரணங்கள் மற்றும் துன்பகரமான குழந்தைகள் விற்பனை பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி இந்த கருத்தை தெரிவித்தார்.
மனைவி சோனியா காந்தியுடன் காலாஹண்டிக்கு சென்று பார்வையிட்ட ராஜீவ் காந்தி, அப்பகுதியின் பின்தங்கிய நிலையைக் கண்டு திகைத்துப் போனதாகவும், கிராமவாசிகளின் அவல நிலையைக் கண்டு நெகிழ்ந்ததாகவும், அவருடன் அவர்களது துயரமான வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களுடன் அப்போதைய முதல்வர் ஜே.பி. பட்நாயக் இருந்தார். அவரது அரசாங்கம் கோராபுட், போலங்கிர் மற்றும் காலாஹண்டி (கே.பி.கே) பிராந்தியத்தில் வறட்சியால் ஏற்பட்ட பெரிய அளவிலான வறுமை குறித்து நிறைய விமர்சனங்கள் உள்ளது.
ராஜீவ் காந்தியின் கருத்து, காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கு பெரும் தீனியாக இருந்தது. அந்த கருத்து அவரது விரக்தியில் இருந்து வந்தது என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள். அவரது கருத்து, களத்தில் உள்ள தரவு அல்லது ஆய்வின் மூலம் ஆதரிக்கப்பட்டதா என்பது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அரசாங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் எடுத்து செயல்படுவதற்கு போதுமானதாக இருந்தது.
1994 ஆம் ஆண்டில், பொருளாதார வல்லுனர் கிரிட் எஸ் பரிக் “பொது விநியோக முறையில் யார் எவ்வளவு பெறுகிறார்கள்: அது ஏழைகளை எவ்வளவு திறம்படச் சென்றடைகிறது” என்ற கட்டுரையை எழுதினார். பல முடிவுகளில், விரிவான ஆய்வுப் பத்தி அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது: அது, “பொது விநியோக முறை தானியங்கள் மூலம் 20% ஏழை குடும்பங்களைச் சென்றடைவதன் செலவு-செயல்திறன் மிகவும் சிறியது” என்று கூறியது.
1995 ஆம் ஆண்டில், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், ஒடிசாவுடன் கலந்தாலோசித்து, கே.பி.கே மாவட்டங்களுக்கான நீண்ட கால செயல் திட்டத்தை வகுத்தது. வறட்சியைத் தடுப்பது, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி செறிவூட்டல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
பின்னர், 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு பகுதியாக நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, கட்சியின் கொள்கை வகுப்பாளர்களின் அட்டவணையில் ஒன்று, நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கசிவை எவ்வாறு அடைப்பது என்பதாக இருந்தது.
2008-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, புந்தேல்கண்ட் பகுதியின் பின்தங்கிய நிலை குறித்து கவனத்தை ஈர்க்கும் முயற்சியில், தனது தந்தையின் புகழ்பெற்ற கருத்தை விளக்கினார். அதைக் குறிப்பிட்டு, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தற்போது ஒரு ரூபாயில் 5 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாகவும் கூறினார்.
ஒரு வருடம் கழித்து, 2009-ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நிதி கசிவு இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், அது சொல்லப்படுவது போல பெரியதல்ல என்று கூறினார்.
அதே நேரத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு கருத்தரங்கில் கூறியதை மேற்கோள் காட்டிய ஊடக செய்திகள், பொது விநியோக முறை குறித்த சமீபத்திய திட்டக் கமிஷன் ஆய்வில், ஒரு ரூபாயில் 16 பைசா மட்டுமே இலக்கு வைக்கப்பட்டு ஏழைகளுக்குச் சென்றடைகிறது என்று கண்டறிந்துள்ளது. அரசு ஒதுக்கிய நிதியில் கசிவு ஏற்பட்டதால் அலுவாலியாவும், திட்டக் கமிஷனும் கவலை அடைந்தது தெரிந்தது. உண்மையில், ஜூலை 2009-ல் அவரது பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில், அலுவாலியா இடைவெளிகளை அடைக்க பட்ஜெட் டிராக்கிங் சிஸ்டம் என்ற யோசனையை முன்வைத்தார்.
இறுதியாக, 2013 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது முறை அமைந்த அரசாங்கம் நேரடி பலன் பரிமாற்ற (DBT) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது கசிவுகளைத் தடுக்கவும், மானியங்கள், பிற நலத் திட்டங்களின் திறமையான இலக்கை உறுதி செய்தது.
பணப் பரிமாற்றத் திட்டத்தின் முதல் கட்டம் 43 மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது. பின்னர், மன்மோகன் சிங் அரசு இதை மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியது.
டிசம்பர் 2014-ல், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாடு முழுவதும் பணப் பரிமாற்றத் திட்டத்தை விரிவுபடுத்தியது.
இதில் சுவாரஸ்யமாக, ராஜீவ் காந்தியின் 15 பைசா கருத்து உச்ச நீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்பட்டது. அது வருமான வரி (ஐடி) சட்டத்தின் திருத்தத்தை உறுதிப்படுத்தியது. இது மதிப்பீட்டாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதைக் கட்டாயமாக்கியது. “அரசு அடித்தட்டு மக்களின் நலனுக்காக செலவிடும் ஒரு ரூபாயில், 15 பைசா மட்டுமே உண்மையில் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த நபர்களைச் சென்றடைகிறது என்று இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் பதிவு செய்துள்ளார். யுஐடி/ஆதார் மூலம், இந்தத் துறையில் உள்ள பெரும்பாலான குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது” என்று நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூன் 2017-ல் கூறியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.