பிரதமர் நரேந்திர மோடியை அவைக்கு வரச் சொல்ல முடியாது என்று ராஜ்ய சபா தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியதை அடுத்து, மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அவையில் உரையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடியை அவையில் இருக்கச் சொல்ல முடியாது, பிரதமரை அவைக்கு வர கூறவும் முடியாது என்று புதன்கிழமை கூறினார். மேலும், மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலவே, அவைக்கு வருவது என்படு பிரதமரின் சிறப்புரிமை உள்ளது என்று கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் அமையின்மை குறித்து ராஜ்ய சபா தலைவரின் ஒப்புதலுடன் விவாதம் நடத்த அனுமதிக்கும் விதி 267-ன் கீழ் 58 நோட்டீஸ்கள் தனக்கு வந்துள்ளதாக ராஜ்ய சபா தலைவர் கூறினார்.
ஜூலை 20-ம் தேதி விதி 167-ன் கீழ் இந்த விவகாரம் குறித்த குறுகிய கால விவாதத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டதால், இந்த அறிவிப்புகள் ஏற்கப்படவில்லை என்று அவர் கூறினார். விதி 167-ன் கீழ் விவாதம் இரண்டரை மணி நேரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்ற எண்ணம் தவறானது என்றும், கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்று தான் கூறியதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, பிரதமர் அவைக்கு வர வேண்டும் எனக் கோரிய நிலையில், ராஜ்ய சபா தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியதாவது: “இந்த நாற்காலியில் இருந்து சரியான அரசியலமைப்பு முன்மாதிரியாகவும் மற்றும் முன்னுதாரணத்தையும் நான் திட்டவட்டமான வகையில் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டேன். பிரதமர் முன்னிலையில் நான் உத்தரவு பிறப்பித்தால் எனது உறுதிமொழியை மீறுவதாக இருக்கும். அது ஒருபோதும் செய்யப்படவில்லை… சட்டம் மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறியாமையை என்னால் ஈடுசெய்ய முடியாது. எல்லோரையும் போல பிரதமர் வர விரும்பினால், அது அவருடைய சிறப்புரிமை. இந்த நாற்காலியில் இருந்து, இதுவரை வெளியிடப்படாத, இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படாது.” என்று கூறினார்.
இடையூறுகள் தொடர்ந்ததால், ராஜ்ய சபா தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம், இந்த விவகாரத்தில் தனக்கு மேலும் ஆலோசனை இல்லை என்று கூறினார்.
“உங்கள் பக்கத்தில் சட்டப்பூர்வ வல்லுநர்கள் உள்ளனர், அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்க்ள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள், அரசியலமைப்பு மற்றும் அதன் கீழ் உள்ள பரிந்துரையின் கீழ், நான் உத்தரவை வழங்க முடியாது. நான் செய்ய மாட்டேன்” என்று ஜெகதீப் தன்கர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"