இரண்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் பெங்காலியிலும், பாஜகவின் எஸ் செல்வகணபதி தமிழிலும் பதவியேற்றனர். அண்மையில் பதவியேற்ற 14 உறுப்பினர்களில் 10 பேர் ஏழு பிராந்திய மொழிகளில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர், மக்களை தங்கள் தாய்மொழியை கற்கவும் பேசவும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
சுவர் பாடம்
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் நடக்கும். நடப்பாண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ம்தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப் படுகிறது. அதன்படி, இந்தாண்டு அமைச்சகங்கள் தங்களது துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு குறித்து பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
அதன்படி, ரயில் பவன் அலுவலகத்தில் மேற்கொண்ட விழிப்புணர்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு இரண்டாவது மாடியில் உள்ள சுவரில், வானத்திலிருந்து ஒரு மனிதனின் பிரீஃப்கேஸில் பணம் விழுவது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது."தவறாகச் சம்பாதித்த பணம், செல்வம் புற்றுநோய் போன்றது… அது நீங்கள் விரும்பும் அனைத்தையும் அழித்துவிடும் என்ற வாசகங்கள் இடம்பெற்றன.
இது அதிகாரிகளைக் கவர்ந்தாலும், அதில் பணத்திற்குப் பதிலாக அமெரிக்க டாலர் இடம்பெற்றதால், இந்தச் செய்தி தங்களுக்குப் பொருந்தாது என்று அதிகாரிகள் கேலி செய்வதாகக் கூறப்படுகிறது.
தாமதித்தாலும் கடமை தவறாத சுகாதாரத் துறை செயலர்
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமையன்று, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார இன்ப்ராஸ்ட்ரக்சர் மிஷின் திட்டம் குறித்த விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனும் செய்தியாளர்களிடம் பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், முதலீடு மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் காரணமாக அவர் தாமதமாக தான் வந்தார். தாமதமானாலும், சந்திப்பிற்குப் பிறகு நடைபெற்ற தேநீரில் செய்தியாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil