மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார்.

இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு.

கலைஞரின் மறைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ்

இத்தகைய சூழலில் திமுக தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி 07/08/2018 மாலை 6.10 மணி அளவில் உடல் நலக்குறைவால் இயற்கை ஏய்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் மட்டுமல்லாது காங்கிரஸ் எம்பிக்கள் என அனைவரும் சென்னை வந்திருந்தனர். இதனால் தேர்தலை ஒத்தி வைக்குமாறு காங்கிரஸ் சார்பில் வெங்கையா நாயுடுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் காங்கிரஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் வெங்கையா நாயுடு.

இந்நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக கனிமொழி உட்பட திமுக எம்பிக்கள் நால்வரும் டெல்லி வருவார்கள் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கும் என்பதைப் பற்றி படிக்க

மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பெரும்பான்மை

மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 246 ஆகும். மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 123 வாக்குகள் தேவைப்படும்.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்

ராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை

 

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்

தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயண சிங் மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் பி.கே. ஹரிபிரசாத் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். நேற்று இரண்டு எம்.பிக்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இன்று காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை துணைத் தலைவர்

வேட்பாளர்கள் பி.கே. ஹரிபிரசாத் மற்றும் ஹரிவன்ஷ் நாராயண சிங்

11.00 am:   தேர்தலை புறக்கணித்தது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவு அளிப்பதாக கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் யாருக்கும் ஆதரவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணித்தனர்.

11.45 am: பி.கே. ஹரிபிரசாத் 105 வாக்குகளைப் பெற்றார்

11.59 am:  125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண சிங்

12.00 pm: தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் நரேந்திர மோடி

12.05 pm : ஊடகவியலாளராக தனது பணியை தொடங்கிய ஹரிவன்ஷ் சிங்கின் அனுபவம் மற்றும் அணுகுமுறைப் பற்றி புகழாரம் சூட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி

12.10 pm : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்ச செய்து கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அருண் ஜெட்லி மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றம் வருகை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close