மார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
rajya sabha seats elections : தமிழகத்தில் திருச்சி சிவா , சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் திருச்சி சிவா , சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
Advertisment
திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, அதிமுகவில் இருந்து பா.ஜ.,வில் இணைந்துள்ள சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், செல்வராஜன், விஜிலா சத்யானந்த் ( அதிமுக), முத்துகருப்பன் உள்ளிட்டோரின்ப பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதேபோல், தேசிய அளவில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மத்திய அமைசச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, தெலுங்கானா, அசாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் 55 புதிய மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய தேதிகள்
வேட்புமனு தாக்கல் துவங்கும் தேதி - 2020, மார்ச் 6
கடைசி நாள் - 2020, மார்ச் 13
தேர்தல் நாள் (போட்டி இருப்பின்) - மார்ச் 26
தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அன்றைய தினமே, பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3 பேர் திமுகவில் இருந்தும், 3 பேர் அதிமுகவில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் னைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil