பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும் தொழிலதிபருமான ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா (62 வயது) உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
ஆப்டெக் லிமிடெட், ஹங்கம்மா டிஜிட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களின் ஒருவராக அறியப்படுகிறார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் இந்த மாதம் தொடக்கத்தில் ’ஆகாஷா ஏர்’ என்ற குறைந்த செலவில் மும்பை – அலகாபாத் விமானத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இவர் இன்று காலையிலேயே அவரை மரணமடைந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ பொருளாதார உலகிற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அளித்த பங்கை யாராலும் ஈடு செய்ய முடியாது. வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் முன்றேத்திற்காக உழைத்தவர். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil